Jayam Ravi Divorce: மனைவியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி.. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை!

மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Jayam Ravi Divorce: மனைவியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி.. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை!

ஜெயம் ரவி, ஆர்த்தி

Updated On: 

29 Oct 2024 15:07 PM

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக வெளியிட்ட செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ரவி. இந்த படத்தில் நடித்த பிறகு ரசிகர்களால் இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். அதன் பிறகு அதுவே இவரது பெயராகவும் சினிமா துரையில் பதிந்துவிட்டது. அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையில்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகம் என அனைவரிடமும் வெளிப்படையாக இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிரவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!