5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரபலங்களின் பாராட்டு மழையில் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ படம்

Amaran Movie: மேஜர் முகுந்த் தனது 31-வது வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது இன்னுயிர் தந்து நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார். இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களின் பாராட்டு மழையில் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ படம்
அமரன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2024 15:32 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஆனாலும் குழந்தைகளை கவரும் வகையில் இருந்ததால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிப்பு மட்டும் இன்றி பாடல்கள் எழுவது, படங்களை தயாரிப்பது போன்ற பணிகளிலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்து தயாரித்த ‘கனா’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி கதைகளைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Also read… தொடங்கியது விஜயின் ’தளபதி 69’ படத்தின் 2-ம் கட்ட ஷூட்டிங்!

முன்னதாக இந்தப் படம் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதால் இது போர் சம்மந்தகாம இருக்கும் என்று கேள்விகள் எழுந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருந்தார். அவர் கூறியதாவது இது மறைந்த ராணுவ வீரரான முகுந்தின் வாழ்க்கை வரலாறு. அவரின் குடும்பம் அவர் ராணுவத்தில் என்ன பணி செய்தார் என்பது குறித்து இந்தப் படம் இருக்கும் என்று படம் போர் சம்மந்தப்பட்டது இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

Also read… தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்… நடிகை சமந்தா ஓபன் டாக்!

மேஜர் முகுந்த் தனது 31-வது வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது இன்னுயிர் தந்து நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார். இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

Latest News