5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய் கட்சி குறித்த செய்தி… இணையத்தில் வைரலாகும் பாலாவின் நச் கமெண்ட்!

KPY Bala: நேற்று ( ஜூன் 15) சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடியில் நடந்த கண்காட்சியில் கலந்து கொண்டார். இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பாலா. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‛நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறீர்களா? நடிகர் விஜய் அழைத்தால் அரசியலுக்குள் நுழைந்து தேர்தலில் போட்டியிடுவீர்களா?'' என்ற கேள்விகளை கேட்டனர்.

விஜய் கட்சி குறித்த செய்தி… இணையத்தில் வைரலாகும் பாலாவின் நச் கமெண்ட்!
பாலா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Jun 2024 09:37 AM

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அழைத்தாலும் நிச்சயம் அரசியலில் இறங்க மாட்டேன் என பாலா கூறியதாக வெளியானது செய்திக்கு அவரது ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தனது தனித்துவ காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் மூலம் ரசிகர்களை ஈர்த்து பிரபலாமானவர் பாலா. கேபிஒய் பாலா (KPY Bala) என மக்களால் அறியபடும் பாலா தற்போது தொலைக்காட்சி தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் பாலாவை அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என்று அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலா, நேற்று ( ஜூன் 15) சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடியில் நடந்த கண்காட்சியில் கலந்து கொண்டார். இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பாலா. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‛நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறீர்களா? நடிகர் விஜய் அழைத்தால் அரசியலுக்குள் நுழைந்து தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என்ற கேள்விகளை கேட்டனர்.

Also read… நிறுத்தப்பட்டதா விஜயின் ‘கோட்’ படம்… வைரலாகும் வெங்கட் பிரபுவின் போஸ்ட்!

அதற்கு பாலா கூறுகையில், ‛‛நான் ஒரு சாதாரண பையன். எனக்கு அரசியல் பற்றி போதிய அறிவு இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் வரும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை. அங்கு இருக்கிறவர்கள் எல்லாம் லெஜண்ட்ஸ். நான் சாதாரண சேவகன். எனக்கு பதவி எதுவும் தெரியாது. உதவி மட்டுமே தெரியும். அரசியலை என் வீட்டில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எனக்கும் அரசியல் தெரியாது” என்றார்.

ஆனால் இந்த பதிலை சில ஊடகங்கள் விஜயே அழைத்தாலும் பாலா அரசியலுக்கு வரமாட்டாராம் என்று செய்திகள் பரப்பின. அவ்வாறு ஒரு ஊடகத்தில் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், “எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன். மற்றவர்களுக்கு நான் செய்யும் உதவிகள் எனது திருமணத்திற்கு பின்பும் தொடரும்” நடிகர் பால கூறியிருந்ததாக போட்டிருந்தனர். இதற்கு பாலா தனது ஸ்டைலில் நக்கலாக இது கேபிஒய் பாலாவிற்கு தெரியுமா என்று கமெண்ட் செய்துள்ளாது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News