5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: விவேக்கிற்கு கமல் செய்த பாவம்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Indian 2: என் படம் ரிலீசாகி 15 நாளைக்கு பின்னாடி வரவேண்டிய ஒரு பெரிய ஹீரோவின் படம், பாலக்காட்டு மாதவன் படத்தோடு நேருக்கு நேர் மோதியது. அதாவது அந்த படம் முதலில் ரிலீசாக வேண்டியதற்கு நடுவில் பாகுபலி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி பாகுபலியோடு போட்டி போட்டு வெளியானால் தன்னுடைய படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என எண்ணி அந்த படத்தை என் படத்துக்கு போட்டியாக வெளியிட்டார்கள்.

Cinema Rewind: விவேக்கிற்கு கமல் செய்த பாவம்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Oct 2024 15:14 PM

நடிகர் விவேக்: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என கொண்டாடப்படும் ஷங்கர், நடிகர் கமல்ஹாசனுடன் 2வது முறையாக இணைந்த படம் “இந்தியன் 2”. கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படத்துக்கு மிக மோசமாக விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, சமுத்திரகனி, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தான் முதல்முறையாக கமலும், விவேக்கும் இணைந்தனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் விவேக் திடீரென காலமானார். இப்படியான நிலையில் இந்தியன் 2 மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அன்றைக்கு விவேக்கிற்கு கமல்ஹாசன் செய்த பாவம் தான் காரணம் என விமர்சித்து ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read: OTT Movies: இந்த ஆண்டில் வெளியான பெஸ்ட் படங்கள்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்

வீடியோவில் இருப்பது என்ன? 

மறைந்த நடிகர் விவேக் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, “நானும் சோனியா அகர்வாலும் இணைந்து பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நடித்தோம். முழுக்க முழுக்க காமெடி படம். நீங்கள் இரண்டரை மணி நேரமும் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இருந்தது. அந்த படத்துக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட தியேட்டர்கள், மலேசியாவில் தியேட்டர், கர்நாடகா, கேரளா தியேட்டர் ரைட்ஸ் எல்லாம் விற்று படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தது. அப்போது என் படம் ரிலீசாகி 15 நாளைக்கு பின்னாடி வரவேண்டிய ஒரு பெரிய ஹீரோவின் படம், பாலக்காட்டு மாதவன் படத்தோடு நேருக்கு நேர் மோதியது. அதாவது அந்த படம் முதலில் ரிலீசாக வேண்டியதற்கு நடுவில் பாகுபலி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: OTT Movies: நண்பர்களுடன் திக் திக் நிமிடங்கள்.. ஓடிடியை கலக்கிய திகில் திரைப்படம்!

அப்படி பாகுபலியோடு போட்டி போட்டு வெளியானால் தன்னுடைய படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என எண்ணி அந்த படத்தை என் படத்துக்கு போட்டியாக வெளியிட்டார்கள். அவர் சினிமாவில் சீனியர் ஹீரோ என்பதால் எவ்வளவோ கெஞ்சி பார்த்தோம். அப்போது இருந்த தயாரிப்பாளர் சங்கத்தால் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

கடைசியில் அந்த பெரிய ஹீரோ படத்தால் என்னுடைய பாலக்காட்டு மாதவன் படத்துக்கு கிடைத்திருந்த 200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தமிழ்நாட்டில் 100 என்ற எண்ணிக்கையில் குறைந்தது. மலேசியாவில் 60 தியேட்டர்கள் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. கேரளா மற்றும் கர்நாடகா விநியோக உரிமையை திரும்ப கொடுத்து விட்டார்கள். பாலக்காட்டு மாதவன் படம் முழுவதுமாக தோல்வியடைந்து விட்டது.

அந்த படம் எது தெரியுமா? 

நடிகர் விவேக் குறிப்பிட்டு சொல்லும் அந்த பெரிய நடிகர் கமல்ஹாசன் தான். அந்த படம் “பாபநாசம்”. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழில் ரீமேக் செய்யப்பட்ட பாபநாசம் படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ், எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன்மணி, ஆஷா சரத், அருள்தாஸ், சார்லி என பலரும் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படமும் பாலக்காட்டு மாதவன் படமும் 2015 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி வெளியானது.  இதனிடையே விவேக் வீடியோவை வைத்து கமலை விமர்சிக்கும் இணையவாசிகளுக்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Latest News