சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை! - Tamil News | Lead Actress Change In Sun Tv Singapenne Serial | TV9 Tamil

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை!

Singapenne Serial: சன் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் துவங்கப்பட்ட புதிய சீரியல் தான் 'சிங்கப்பெண்ணே'. திங்கள் முதல் சனி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் நாயகி ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை!

சிங்கப்பெண்ணே

Published: 

27 May 2024 10:29 AM

பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.

சன் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் துவங்கப்பட்ட புதிய சீரியல் தான் ‘சிங்கப்பெண்ணே’. திங்கள் முதல் சனி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் நாயகி ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

சிங்கப்பெண்ணே சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் மனீஷா முகேஷ் நடிக்க தர்ஷாக் கௌடா, அமல்ஜித் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சன் டிவியில் மிகவும் பிரபலமாக பல ஆண்டு காலம் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே’ சீரியலை இயக்கிய தனுஷ் தான் சிங்கப்பெண்ணே தொடரையும் இயக்குகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தொடர்ந்து சின்னத்திரை டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வருகிறது சிங்கப்பெண்ணே சீரியல்.

Also read… ”எனக்கு கல்யாணம் ஆனா அவங்க கஷ்டப்படுவாங்க”… நடிகர் பிரபாஸ்!

இந்த நிலையில் சீரியலில் ஆனந்தியின் தோழியாக ரெஜினா வேடத்தில் நடித்துவந்த நடிகை ஜிவி டிம்பிள் திடீரென சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். காரணம் அவர் சன் டிவியின் புதிய தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ரெஜினா கேரக்டரில் ஜிவி டிம்பிள்க்கு பதிலாக வீஜே கல்யாணி நடிக்க இருக்கிறார் என்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?