Kollywood Year Ender: 2024-ம் ஆண்டு ரசிகர்களை பெரிதும் கவராத படங்களின் லிஸ்ட் இதோ!
கோலிவுட்டில் 2024-ம் ஆண்டு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பல வெளியானது. சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பல திரையரங்குகளில் வெளியானது. இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்த படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
லால் சலாம்: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம் லால் சலாம். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தர். இவர்களுடன் இணைந்து லிவிங்ஸ்டன், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, தங்கதுறை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மத நல்லிணக்கத்தை கருவாக வைத்து படத்தை எடுத்ததாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்தாலும் படத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ரசிகர்களுக்கு தெளிவாக புரியவில்லை. மேலும் படத்தில் கிரிக்கெட் மையமா அல்லது கோவில் தேர்த் திருவிழா மையமா என்பதும் சரியாக புரியவில்லை. இதற்கிடையில் படதின் ஹாட்டிஸ்க் காணாமல் போய்விட்டதாகவும் இதனால் படத்தின் காட்சிகள் பல சேர்க்க முடியாமல் போனதாகவும் ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் படத்தின் மொத்த காட்சிகளும் காணாமல் போயிருக்கலாம் என்று விமர்சனம் கூறும் அளவிற்கு படம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. அதனை தொடர்ந்து நெட்டிசன்கள் படத்தை பார்த்துவிட்டு பருத்திமூட்டை குடோனிலே இருந்து இருக்கலாம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியன் 2: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்தியன் 2 படம். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் சங்கரே இதையும் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. முதல் பாகத்தின் எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்கள் படம் சுமாராக இருந்ததாகவே கருத்து தெரிவித்தனர். படம் ஓடிடியில் வெளியான பிறகும் ரசிகர்களிடையே நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையே பெற்று வந்தது.
பிளடி பெக்கர்: நடிகர் கவின் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் உருவான படம் பிளடி பெக்கர். அறிமுக இயக்குநர் சிவபாலன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, சுனில் சுகாதா, மாருதி பிரகாஷ்ராஜ், அக்சயா ஹரிஹரன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
கவின் இந்தப் படத்தில் மிகவும் வித்யாசனாம தோற்றத்தில் பிச்சைகாரனாக நடித்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
மேலும் படம் வசூலிலும் ஏமாற்றத்தையே அளித்தது. இந்த நிலையில் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஓடிடியில் வெளியானது. அப்போது தியேட்டரைப் போல அல்லாமல் சில நல்ல விமர்சனங்களும் இந்தப் படத்திற்கு கிடைத்தது.
பிரதர்: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிரதர். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
Also read… இதயத்தை உடைக்கிறது… அல்லு அர்ஜுன் கைதிற்கு ராஷ்மிகா போட்ட பதிவு!
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நட்டி, பூமிகா, சரண்யா பொன்வன்னன், தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், கூல் சுரேஷ் என பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையேப் பெற்றது.
கங்குவா: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கங்குவா’. இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது.
Also read… Happy Birthday Regina Cassandra: நடிகை ரெஜினா கசாண்ட்ரா குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் எடுக்கப்பட்டது. கங்குவா படம் மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சுமார் 350 கோடிக்கும் அதிகமான பொருட் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப்படம் வசூலில் 100 கோடியை தாண்டவே திணறியது.
கங்குவா படத்தில் வரும் வசனத்தை விட பின்ன்ணி ஒலி அதிகமாக இருந்ததால் வசனம் புரியவில்லை என்றும் படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.