5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theatre Release Movies: கோலிவுட்டில் நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Movie Update: கோலிவுட் முதல் டோலிவுட் வரை அக்டோபர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் இந்த மாதம் வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் நான்காவது வாரம் கோலிவுட்டில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகவுள்ளது.

Theatre Release Movies: கோலிவுட்டில் நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2024 17:50 PM

அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நடித்த திரைப்படம் ‘தீபாவளி போனஸ்’. இத்திரைப் படத்தில் ரித்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் நாளை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என பல விருதுகளை பெற்றது ஒற்றை பனைமரம் திரைப்படம். இப்படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் நாளை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் அமல் தேவ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘சீன் நம்பர் 62’. இயக்குநர் ஆடம் ஜாஃபர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் நாளை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இயக்கத்தில் நடிகர் பிரஜின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சேவகர்’. இந்தப் படத்தில் பிரஜின் உடன் ஷகானா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் நாளை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் சசிதரன் மற்றும் சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள திரைப்படம் ஹேப்பி பர்த்டே லூசி படத்தை எஸ்.எம்.முகமது அசாருதீன் இயக்கியுள்ளார். படம் நாளை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர்கள் சதா மற்றும் மோனிகா இயக்கி நடித்துள்ள படம் இல் தக்க சை யா. படம் நாளை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest News