5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theatre Release Movies: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

Movie Update: கோலிவுட்டில் அக்டோபர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. ரஜினி முதல் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த மாதம் வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் முதல் வாரம் கோலிவுட் மட்டும் இன்றி பாலிவுட் டோலிவுட்டிலும் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

Theatre Release Movies: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!
படங்கள்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2024 17:08 PM

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல நிறச் சூரியன்’. “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன்” என்கிறார் திருநங்கை சம்யுக்தா விஜயன்.  பர்ஸ்ட் காப்பி புரொடக்‌ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்துள்ள இதில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் சீரன். ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தெக்கு வடக்கு என்பது பிரேம் சங்கர் இயக்கிய மலையாள நகைச்சுவை படமாகும். இதில் விநாயகன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ் ஹரீஷின் ராத்திரி காவல் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அஞ்சனா டாக்கீஸ் மற்றும் விஏஆர்எஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்கும் படம் ‘ஆரகன்’. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விவேக்-ஜெஸ்வந்த் இசையமைத்துள்ளனர். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில், விஷ்ணுபிரியா வேலுச்சாமி தயாரித்து இயக்குநர் காளிமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் வேட்டைக்காரி. ராகுல் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சனா சிங் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வின்சன்ட் அசோக் மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் உல்லாஸ் கிருஷ்ணா இயக்த்தில் உருவாகியுள்ள படம் புஷ்பக விமானம். மலையாளத்தில் வெளியாகவுள்ள சிஜு வில்சன், பாலு வர்கீஸ், தீரஜ் டென்னி, மனோஜ் கே.யு மற்றும் நம்ரிதா எம்.வி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஹாசித் கோலி எழுதி இயக்கியுள்ள படம் ஸ்வாக் (SWAG). தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீ விஷ்ணு, ரிது வர்மா, மீரா ஜாஸ்மின் மற்றும் தக்ஷா நகர்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest News