Theatre Release Movies: நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! - Tamil News | list of 7 movies released on 18th October third week | TV9 Tamil

Theatre Release Movies: நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Movie Update: கோலிவுட் முதல் டோலிவுட் வரை அக்டோபர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் இந்த மாதம் வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் மூன்றாவது வாரம் கோலிவுட் மட்டும் இன்றி பாலிவுட் டோலிவுட்டிலும் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

Theatre Release Movies: நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

படங்களின் லிஸ்ட்

Published: 

17 Oct 2024 19:40 PM

இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்தநிலையில் முன்னதாக இப்படத்தின் முதல் ட்ரெய்லரை கடந்த செப்டம்பர் மாதம் படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது கல்வி மறுக்கப்படும் மக்களின் கல்விக்காக போராடும் நபராக சரவணனும் விமலும் நடித்துள்ளது தெரிந்தது. இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘ஆலன்’. படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபல இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கெட் ட்ரைவர்’. நடிகை சுனைனா மற்றும் விஷ்வந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கு இந்தப் படத்தில் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படம் ஃபேண்டசி, டிராமா, காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஜேம்ஸ் யுவன் இயக்கத்தில் ஆர் எஸ் கார்த்திக் என்கிற அறிமுக நடிகர் ஹீரோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆரியமாலா. இந்த படத்தில் மனிஷா ஹீரோயினாக நடிக்க மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பிரபாத் தயாரித்து நடிக்கும் படம், ‘கருப்பு பெட்டி’. ‘பில்லா பாண்டி’ படம் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக களம் இறங்கியதோடு, அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து நடிகராகவும் கவனம் ஈர்த்த கே.சி.பிரபாத், ‘கருப்பு பெட்டி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.தாஸ் இயக்கியுள்ளார்.

நம் நாட்டில் நடக்கும் ஊழல் கல்வி வாரியங்களில் நடக்கும் மோசடிகள் மற்றும் அது மாணவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆயுஷ்மதி கீதா படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை கஷிகா கபூர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் கல்யாண் சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சாய் ரோனக் மற்றும் அம்ருதா சௌத்ரி நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் ரீவைண்ட். காதல் ட்ராமா என அனைத்து எமோஷன்களும் கொண்ட இந்தப் படம் நாளை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...