5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார்?

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மே மாதம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பிரிவை அறிவித்தனர். அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்தை அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு தங்களது 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார்?
கோலிவுட் பிரபலங்கள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Nov 2024 12:56 PM

கோலிவுட் சினிமாவில் ஆதர்சன தம்பதிகளாக உலா வரும் பலர் தொடந்து தங்களது பிரிவை அறிவித்து வருவது ரசிகரகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் யார் யார் விவாகரத்தை அறிவித்துள்ளனர் என்பதை பார்க்கலாம். அதன்படி இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மே மாதம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பிரிவை அறிவித்தனர். அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்தை அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு தங்களது 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி:

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் தொடர்பு இருப்பது பலருக்குத் தெரியாது. ஜி.வி-யின் அம்மா ஏ.ஆர்.ரிஹானா, ரஹ்மானின் மூத்த சகோதரி ஆவார். ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜி.வி. அந்நியன், உன்னாலே உன்னாலேஆகிய படங்களில் சில பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதையும் பெற்றார் ஜி.வி. கடந்த 2013-ம் ஆண்டு பள்ளியில் இருந்தே தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை திருமணம் செய்துக்கொண்டார் ஜி.வி. இவருகள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதற்கு அவர்களின் நிஜ வாழ்க்கையில் உள்ள காதலும் ஒரு காரணம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ‘அன்வி’ என்ற பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, நடிப்பது என தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் கிசுகிசுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்ததாக அறிவித்தனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also read… Bigg Boss Tamil Season 8: அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு… அரியணை வெல்லப்போவது ஆண்களா? பெண்களா?

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி:

தனது அண்ணன் இயக்குநர் ராஜா இயக்கத்தில் உருவான ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ரவி. இந்த படத்தில் நடித்த பிறகு இவர் ரசிகர்களால் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். அதன் பிறகு அதுவே இவரது பெயராகவும் கோலிவுட் சினிமா துறையில் பதிந்துவிட்டது. அதனை தொடர்ந்து ஜெயம் ரவி பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. தற்போது இவருகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

Also read… சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்… வைரலாகும் போட்டோ

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாயிரா பானு:

இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகன் என்று ரசிகரக்ளால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து கோலிவுட், பாலிவுட் என பிசியாக இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் 29  ஆண்டு கால திருமண உறவைப் விட்டுப் பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாயிரா பானு ஆகியோர் அறிவித்துள்ளனர்.

திருமண பந்தத்தின் 30-வது ஆண்டை கொண்டாட ஆவளுடன் இருந்த இந்த தம்பதிகள் தற்போது பிரிவை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இந்த உடைந்த இதயங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக்கூடும், இதய சிதைவுகள் தங்கள் இடத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.

Latest News