Kollywood Year Ender: 2024-ம் ஆண்டு ரீ ரிலீசான படங்களின் லிஸ்ட் இதோ!
Rereleased Tamil Movies in 2024: கோலிவுட்டில் இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி ஹிட் அடித்தது ஒரு புறம் இருக்க, முன்னணி நடிகர்கள் சிலரின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது சூப்பர் ஹிட் ஆனது குறித்து தற்போது பார்க்கலாம்.
மங்காத்தா: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 50-வது படமாக உருவானது மங்காத்தா. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து நடிகை த்ரிஷா, அர்ஜூன், ஆண்ரியா, லக்ஷ்மி ராய், அஞ்சலி, மகத், வைபவ், பிரேம் ஜி என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்கள் நிறைந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்த நிலையில் இந்தப் படம் இந்த ஆண்டு நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
அஜித் ரசிகர்களின் ஃபேபரைட் படமான இது ரீ ரிலீஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி படம் ரூபாய் 14 லட்சம் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பில்லா: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பில்லா. இவர்களுடன் இணைந்து நமீதா, பிரபு, ரகுமான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் நடித்து 1980-ம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
Also read… சன் டிவியில் ஹிட் அடித்த எதிர்நீச்சல் சீரியலில் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது?
இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூல் வேட்டையும் நடத்தியது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி படம் ரூபாய் 25 லட்சம் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தீனா: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் தீனா. இந்தப் படத்தின் மூலமாக முருகதாஸ் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி படம் ரூபாய் 50 லட்சம் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also read… தியேட்டரில் டல்லடித்த ‘கங்குவா’ ஓடிடியில் சாதனை… என்ன தெரியுமா?
3: நடிகர்கள் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது 3. ரொமான்டிக் சைக்கலாஜிக்கல் கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 3 படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 1.50 கோடி ரூபாய் வசூல் செய்தது.
கில்லி: நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் கில்லி. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்தை விட கில்லி படம் மொத்தம் 35 கோடி ரூபாய் 25 நாட்களில் வசூல் செய்து அசத்தியது. இந்த ஆண்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கோலிவுட் படங்களில் விஜயின் கில்லி படம் தான் அதிகம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.