5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Release : தங்கலான் முதல் விடுதலை பாகம் 1 வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்!

This Week OTT Movies : தமிழ் ரசிகர்களிடையே திரைப்படங்கள் தியேட்டரில் எந்த அளவிற்கு வரவேற்புகளைப் பெறுகிறதோ அதே போல் ஓடிடியில் வெளியாகும் படங்களும் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் தங்கலான் திரைப்படம் முதல் விடுதலை பாகம் 1 படம் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் குறித்து பார்க்கலாம்.

OTT Release : தங்கலான் முதல்  விடுதலை பாகம் 1 வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்!
ஓடிடி படங்கள்
barath-murugan
Barath Murugan | Updated On: 12 Dec 2024 18:17 PM

தங்கலான் : தமிழ்த் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தங்கலான். நடிகர் சியான் விக்ரமின் முன்னணி நடிப்பில் உருவான இப்படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷ்ன் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் உருவான இப்படமானது, ஆந்திரா, மதுரை மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் கதைக்களமானது கொத்தடிமைகளாக வசிக்கும் கிராம மக்களின் நிலா போராட்டம் மற்றும் தோள் சீலை போராட்டம் என மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான இப்படத்தில் விக்ரமுடன் நடிகைகள் மாளவிகா மோகன், பார்வதி திருவோடு, டேனியல் கால்டாகிரோன் , பசுபதி மற்றும் ஹரி கிருஷ்ணன் எனப் பலரும் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படமானது கடந்த டிசம்பர் 10ம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இப்படத்தை மறக்காமல் பாருங்க.

விடுதலை பாகம் 1:

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி மற்றும் பவானி ஸ்ரீ எனப் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை பாகம் 2 வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. ஆக்ஷன் மற்றும் மனித உரிமை என மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகிய திரைப்படம். தற்போது ஒரு வருடத்திற்குப் பிறகு ஜீ5யில் வரும் டிசம்பர் 13ம் தேதியில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க :கீர்த்தி சுரேஷ் திருமணம்.. நேரில் பங்கேற்ற விஜய்.. கல்யாண புகைப்படங்கள்!

கனகராஜ்யம்:

பிரபல மலையாள இயக்குநர் சாகர் ஹரி இயக்கத்தில் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாக்கிய திரைப்படம் இந்த “கனகராஜ்யம்”. இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர்களாக இந்திரன்ஸ் மற்றும் முரளி கோபி நடித்துள்ளனர். இப்படத்தின் கதியானது த்ரில்லர் காட்சிகளுடன் திருப்பங்கள் நிறைந்த மாறுபட்ட திரைக்கதைகளுடன் அமைந்துள்ளது.

இப்படத்தில் துணை கதாபாத்திரங்களாக லியோனா லிசாய், ரம்யா சுரேஷ், ஸ்ரீஜித் ரவி, அதிரா படேல் மற்றும் தினேஷ் பிரபாகரன் என பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 10ம் தேதியில் அமேசன் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :“எல்லாம் கடவுளுக்கு தெரியும்” – போலியான தகவலுக்கு கொதித்தெழுந்த சாய் பல்லவி!

வெனம் தி லாட்ஸ் டான்ஸ் :

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கெல்லி மார்செல் இயக்கத்தில் ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக வெளியானது வெனம் தி லாட்ஸ் டான்ஸ். பிரபல ஹாலிவுட் நடிகர் ஹார்டி முன்னணி நடிப்பில் உருவான இப்படம் கடந்த அக்டோபர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாகியது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஹார்டியுடன், ஜுனா டெம்ப்லே மற்றும் அலன்னா உபைத் எனப் பலரும் நடித்திருந்தனர்.. இப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 400 மில்லியனுக்கு மேல் வாயில் செய்துள்ளது. இந்நிலையில் வெனம் தி லாட்ஸ் டான்ஸ் திரைப்படம் கடந்த டிசம்பர் 10ம் தேதி அமேசன் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள்.. விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

கதா இன்னுவரே:

இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ம் தேதியில் வெளியான மலையாள திரைப்படம் கதா இன்னுவரே. இந்த படத்தில் நடிகை நிகிலா விமல் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களமானது பல பிரச்சனைகளைச் சமாளித்து ஒன்றாக இருக்கப் போராடும் தம்பதிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியான படமாகும்.

இப்படத்தில் நடிகை நிகிலா விமலுடன் மேதில் தேவிகா, அனுஸ்ரீ நாயர், பிஜு மேனன் மற்றும் அணு மோகன் எனப் பல் மழையால் பிரபலங்கள் நடித்துள்ளனர். காதல் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற மாறுபட்ட திரைக்கதைகளுடன் தியேட்டரில் வெளியான இப்படம் தற்போது, வரும் டிசம்பர் 13ம் தேதி மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க :ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 2’ல் இணையும் பிரபல மலையாள நடிகர்!

Latest News