Top Movies: 2024 ஜூன் மாதம் வரை வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்களின் பட்டியல்..!
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே மிக பெரிய அளவில் வெற்றியை பெறாத நிலையில் வெளிவந்த சில படங்களும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வருடத்தின் ஆறு மாதங்கள் முடிவுற்ற நிலையில் தமிழ் சினிமாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் சூழலில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெளியான டாப் 10 திரைப்படங்கள் குறித்து காணலாம்.
உலக சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு என்று தனி இடம் உண்டு அப்படி தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறி உள்ளன. மற்ற மொழிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் தமிழ் மொழி படங்கள் விளங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக மோசமாகவே அமைந்துள்ளது. வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்றும் பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை என்றுமே பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த வருடம் நேரடியாக வெளியான திரை தமிழ் திரைப்படங்களை காட்டிலும் மற்ற மொழி திரைப்படங்களில் தமிழகத்தில் மிகால மற்ற மொழி திரைப்படங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வசூலித்து சாதனைப்படைத்தன. மேலும், ரீ ரிலிஸ் திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தனர். தமிழில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக ஒருசில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தன. இப்படி இந்த வருடம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான கேப்டன் மில்லர், அரண்மனை 4, அயலான், கில்லி, கருடன், கல்கி 2898 AD என பல திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது திரைப்படங்கள் பட்டியல் இதோ…
கேப்டன் மில்லர்
‘சத்யா ஜோதி பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் வழங்கும், இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ் குமார் என பல திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த அதிரடி திரைப்படம் கேப்டன் மில்லர். இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ₹104.79 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அரண்மனை 4
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வரிசையில் வெளியான அரண்மனை 4ஆம் பாகம் ஹாரர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். அரண்மனை திரைப்படம் இதுவரை ₹100.50 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயலான்
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என என பல்வேறு நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்து வெளிவந்த அயலான் திரைப்படம் மாறுபட்ட விமர்சனங்களை பெற்றது. அறிவியலை மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளியானது. பிரபல தயாரிப்பாளரான கொட்டப்படி ஜே ராஜேஷ் தனது KJR தயாரிப்பில், இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் திரைப்படம் இதுவரை ₹96 கோடி வசூலித்துள்ளது.
மகாராஜா
இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் அதிரடி கதைக்களத்தில் வெளியானது. சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்திர்கு இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மகாராஜா திரைப்படம் இதுவரை ரூ88 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கருடன்
இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான கருடன் தமிழ் திரைப்ப்ட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ்