ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ‘லப்பர் பந்து’ படக்குழு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - Tamil News | Lubber pandhu movie will be released ott on 31st | TV9 Tamil

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ‘லப்பர் பந்து’ படக்குழு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ‘லப்பர் பந்து’ படக்குழு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

லப்பர் பந்து

Published: 

22 Oct 2024 11:57 AM

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லப்பர் பந்து படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள்.

விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் கடந்த மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லப்பர் பந்துகள் ரூ. 15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் படத்தின் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கு காளி வெங்கட் என் அணி ஜெயிக்கனும் அதனால் இவன் விளையாடுவான் என்று ஹரிஷ் கல்யாணை டீமில் சேர்த்துக்கொள்கிறார். வேண்டா வெறுப்பாக இதற்கு ஒத்துக்கொள்கிறார்.

அப்போது நடைபெறும் போட்டியில் எதிரணியில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து பூமாலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அட்டகத்தின் தினேஷ். விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து. பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். கெத்து என்கிற பூமாலையான அட்டக்கத்தி தினேஷின் பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக ஹரிஷ் கல்யாண் கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அருணால் ஆண்கள் அணிக்கு வரும் சிக்கல்… பெண்கள் அணி கொடுத்த ட்விஸ்ட்!

மறுபக்கம் அட்டக்கத்தி தினேஷ் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையில் சின்ன  மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. தினேஷின் மகள் சஞ்சனாவுக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையில் காதல் வளர்கிறது. விளையாட்டில் இரு ஆண்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சனை. அதே விளையாட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் , சாதியை காரணம் காட்டி கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு அம்சங்களை வைத்து ஒரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

முன்னதாக அக்டோபர் 18-ம் தேதி இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருந்தது. ஆனால், இப்போதும் திரையரங்கில் நல்ல வரவேற்பினை பெற்று வந்ததால் ‘லப்பர் பந்து’. படம்  திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படம் வரும் 31-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?