விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த லப்பர் பந்து படக்குழு

Lubber Pandhu Movie: படம் பார்த்த அனைவருக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விஜயகாந்தின் ‘நீ பொட்டு வைத்த’ பாடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி செய்துவிட்டார் இயக்குநர். அதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியதாவது, "நாம எல்லாரும் விஜயகாந்த்தின் ரசிகர்கள்தான். நானும், நடிகர் தினேஷும் நடிகர் விஜயகாந்த்தின் மிகப் பெரிய ரசிகர்கள். அதிலும் நான் தீவிர ரசிகன். அதனால், நான் எடுக்கும் முதல் படத்தில் கண்டிப்பாக விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் லப்பர் பந்து படத்தில் அவருடைய பாடல்களை வச்சி, அவரைக் கொண்டாடினேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த லப்பர் பந்து படக்குழு

லப்பர் பந்து படக்குழு

Published: 

27 Sep 2024 11:04 AM

லப்பர் பந்து படக்குழுவினர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு, அங்கு வந்தவர்களுக்கு அன்னதானம் செய்வதிலும் பங்குபெற்றுள்ளனர். ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள்.

லப்பர் பந்துகள் ரூ. 15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் படத்தின் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கு காளி வெங்கட் என் அணி ஜெயிக்கனும் அதனால் இவன் விளையாடுவான் என்று ஹரிஷ் கல்யாணை டீமில் சேர்த்துக்கொள்கிறார். வேண்டா வெறுப்பாக இதற்கு ஒத்துக்கொள்கிறார் டிஎஸ்கே.

Also read… ’Devara: Part 1′ Twitter Review: ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா: பகுதி 1 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

அப்போது நடைபெறும் போட்டியில் எதிரணியில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து பூமாலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அட்டகத்தின் தினேஷ். விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து. பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். கெத்து என்கிற பூமாலையான அட்டக்கத்தி தினேஷின் பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக ஹரிஷ் கல்யாண் கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.

அதனை தொடர்ந்து லப்பர் பந்து ரூ. 35-க்கு விற்கப்படும் காலத்தில் கதை செல்கிறது. அட்டக்கத்தி தினேஷ் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையில் சின்ன  மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. பார்க்கிங் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் கடைசி வரை படத்தை பார்க்க வைத்தது போல இந்த படத்திலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இடையே அந்த ஈகோ விஷயமும் பக்காவாக க்ளிக் ஆகியிருக்கிறது.

Also read… எதிர்பாராததை எதிர்பாருங்கள்… பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்!

விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் காமெடி மட்டும் இன்றி காதல், பிரிவால் ஏற்படும் வலி, உறவுகளுக்கு இடையேயான சிக்கல் சாதியால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் கூறியிருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

படம் பார்த்த அனைவருக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு விஜயகாந்தின் ‘நீ பொட்டு வைத்த’ பாடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி செய்துவிட்டார் இயக்குநர். அதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியதாவது, “நாம எல்லாரும் விஜயகாந்த்தின் ரசிகர்கள்தான். நானும், நடிகர் தினேஷும் நடிகர் விஜயகாந்த்தின் மிகப் பெரிய ரசிகர்கள். அதிலும் நான் தீவிர ரசிகன். அதனால், நான் எடுக்கும் முதல் படத்தில் கண்டிப்பாக விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் லப்பர் பந்து படத்தில் அவருடைய பாடல்களை வச்சி, அவரைக் கொண்டாடினேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இப்படியான நிலையில், படக்குழுவினர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் கேப்டனின் குடும்பத்தாரான, கேப்டனின் மனைவி பிரேமலதா விஜய்காந்த், மகன் விஜயபிரபாகரன் அகியோர் உடன் இருந்தனர். மேலும் அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். லப்பர் பந்து படக்குழு தரப்பில் இருந்து நாயகர்கள் தினேஷ், ஹரீஸ் கல்யாண், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!