‘மாயி’ பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!
Director Suriyaprakash: சரத்குமார், மீனா, வடிவேலு நடித்த ‘மாயி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் 2000-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வராவேற்பைப் பெற்றது. படத்தில் வடிவேலுவின் காமெடி இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவதை சற்று நிறுத்திவிட்டு தெலுன்கு சினிமா பக்கம் சென்ற இயக்குநர் சூர்ய பிரகாஷ் ராஜசேகர், மீனாவை வைத்து ‘பாரத சிம்ஹா ரெட்டி’ என்ற படத்தை இயக்கினார்.
கடந்த 1999-ம் ஆண்டு ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். அடுத்து சரத்குமார், மீனா, வடிவேலு நடித்த ‘மாயி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் 2000-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வராவேற்பைப் பெற்றது. படத்தில் வடிவேலுவின் காமெடி இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவதை சற்று நிறுத்திவிட்டு தெலுன்கு சினிமா பக்கம் சென்ற இயக்குநர் சூர்ய பிரகாஷ் ராஜசேகர், மீனாவை வைத்து ‘பாரத சிம்ஹா ரெட்டி’ என்ற படத்தை இயக்கினார். மீண்டும் 2003-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு திரும்பிய இயக்குநர் சரத்குமார் நடிப்பில் ‘திவான்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வருசநாடு’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இயக்குநர் சூர்ய பிரகாஷிற்கு தற்போது வயது 61. அவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also read… ‘எனக்கு இப்படி ஒரு நோய்.. 41 வயதில் தெரிந்தது’ – நடிகர் பகத் பாசில் ஓபன் டாக்!
நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு இரங்கள் பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது… pic.twitter.com/vxgqBSPLQE
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) May 27, 2024
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.