சூப்பர் ஹிட் அடித்த மகாராஜா படம்… இயக்குநருக்கு கார் பரிசளித்த படக்குழு
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்தது.
விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக உருவான ‘மகாராஜா’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் படத்தின் இயக்குநர் நித்திலனுக்கு படக்குழு சொகுசு காரை பரிசளித்துள்ளது. குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து நடிகர் விஜய் சேதுபதியின்50 – வது படமான ‘மகாராஜா’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்கில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சலூன் நடத்திக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, மகள் ஜோதியுடன் வசித்து வருகிறார். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கும் விஜய்சேதுபதி, காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். போலீசார் லட்சுமி யார் என்று கேட்க, அது யார் என்று சொல்லமுடியாமல் விஜய்சேதுபதி திணறினார், ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல, கடுப்பாகும் போலீசார் இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். படம் குறித்து மக்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்தனர்.
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்தது.
தன்னுடைய அழுத்தமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் மகாராஜா படத்திற்கு வெயிட் ஏற்றியுள்ளார் நிதிலன் சாமிநாதன். இந்நிலையில் இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து இந்தியாவில் டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது. அதே போல 14 நாடுகளில் ட்ரெண்டிங் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று ஓடிடியில் சாதனை படைத்துள்ளது.
விஜய் சேதுபதியின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ள மகாராஜா படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. அதுமட்டுமில்லாமல், மகாராஜா படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்சிலும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
Thank u so much @Sudhans2017 and @Jagadishbliss for this wonderful gift Thank you one an all who all made this possible @VijaySethuOffl @PassionStudios_ @TheRoute #Maharaja #Maharaja_100_days pic.twitter.com/usanP3qFvi
— Nithilan Saminathan (@Dir_Nithilan) October 6, 2024
இந்த படம் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏராளமான ரசிகர்களை அதிர செய்த நிலையில் படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவுடன் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவான மகாராஜா படம், மிகப்பெரிய அளவில் வசூலை தயாரிப்பாளர்களுக்கு ஈட்டி கொடுத்தது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும்வகையில் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் படத்தின் இயக்குநர் நிதிலன் சாமிநாதனுக்கு தற்போது விலை உயர்ந்த கார் ஒன்றைய பரிசாக அளித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை நித்திலன் சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.