5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஜினி, தனுஷ் பட வில்லன் விநாயகன் கைது… என்ன காரணம்?

மலையாளத்தில் கம்மட்டிபாடம், தொட்டப்பன் போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர் விநாயகன். வில்லன், காமெடி, குணசித்திர நடிகராக வலம் வரும் விநாயகன் கொச்சியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்குப் பறந்துகொண்டிருந்த போது, சனிக்கிழமை மாலை விமான நிறுவனத்தின் கேட் ஊழியர்களிடம் தகராறு செய்து அநாகரீகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு விநாயகன் சி.ஐ.எஸ்.எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டார். சி.ஐ.எஸ்.எஃப் அளித்த புகாரின் பேரில் விநாயகன் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ரஜினி, தனுஷ் பட வில்லன் விநாயகன் கைது… என்ன காரணம்?
விநாயகன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2024 14:21 PM

நடிகர்கள் ரஜினி மற்றும் தனுஷ் படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமானநிலைய கேட் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், காளை, மரியான், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ஜெயிலர் படத்தில் நடித்த கதாப்பாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் கேரளா மாநிலத்தில் இருந்து கோவா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி இவருக்கான இணைப்பு விமானம் ஐதராபாத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக கொச்சினில் இருந்து ஐதராபாத் ஷம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்ற விநாயகன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை இராணுவப் படையினரான சிஐஎஸ்எப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

மலையாளத்தில் கம்மட்டிபாடம், தொட்டப்பன் போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர் விநாயகன். வில்லன், காமெடி, குணசித்திர நடிகராக வலம் வரும் விநாயகன் கொச்சியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்குப் பறந்துகொண்டிருந்த போது, சனிக்கிழமை மாலை விமான நிறுவனத்தின் கேட் ஊழியர்களிடம் தகராறு செய்து அநாகரீகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு விநாயகன் சி.ஐ.எஸ்.எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டார். சி.ஐ.எஸ்.எஃப் அளித்த புகாரின் பேரில் விநாயகன் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Also read… ஒன்னு சொன்னா செருப்ப கழட்டி அடிக்க மாட்டீங்களே… மெய்யழகன் டீசர் இதோ!

“தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், என்னை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அறைக்குள் அழைத்து சென்று தாக்கியுள்ளார்கள்” என நடிகர் விநாயகன் தெரிவித்துள்ளார்.  முன்னதாக விநாயகன் கடந்த 2023-ம் ஆண்டிலே ஒருமுறை எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போதும் மதுபோதையில் இருந்த விநாயகன் காவல்நிலையத்திற்குள்ளேயே பிரச்சனை செய்தார். அதன் காரணமாக அவர் எர்ணாகுளம் வடக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News