5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.1000 கோடி வசூலித்த மலையாள படங்கள்.. தடுமாறும் தமிழ்.. 5 மாத சினிமா ரீவைண்ட்!

Malayalam cinema: கடந்த ஆண்டில் மலையாள சினிமாவில் வெளியான ‘2018’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘ரோமாஞ்சம்’, ‘நேரு’ ஆகிய படங்கள் மொத்தமாகவே ரூ.500 கோடி வசூலை குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 மாதங்களில் ரூ.1,000 கோடியை வசூலித்து முன்னேறியிருக்கிறது மலையாள திரையுலகம்.

ரூ.1000 கோடி வசூலித்த மலையாள படங்கள்.. தடுமாறும் தமிழ்.. 5 மாத சினிமா ரீவைண்ட்!
மலையாள படங்கள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2024 10:06 AM

2024-ம் ஆண்டு ஆரம்பித்து 5 மாதங்கள் முடிய போகிறது. இந்த ஆண்டு மலையாள சினிமாவிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இதனால் தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ 1,000 கோடி நெருங்கும் விளிம்பில் உள்ளது. ஆனால் தமிழில் பெரிய அளவில் வசூல் வேட்டையாடிய படங்கள் எதுவும் இல்லை. தமிழ் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என மற்ற மொழிகளிலும் மலையாளம் போல பெரிய ஹிட் கொடுத்த படங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். ஜனவரி முதல் ஏப்ரல் வரை மலையாளத்தில் வெளியான படங்கள் அனைத்தும் 985 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பிரித்விராஜ் மற்றும் பேசில் நடிப்பில் வெளியான குருவாயூர் ஆம்பளநடையில் மற்றும் இந்த வாரம் மம்முட்டியின் நடிப்பில் வெளியாகவுள்ள டர்போ, போன்ற படங்களின் மூலம் ரூ.1000 கோடி வசூலை தாண்டிவிடும் என்று சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வெளியான எந்தப் படமும் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை.  புதிதாக வெளியாகும் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களைவிட குறைவான வசூலையே ஈட்டியது தமிழ் சினிமாவிற்கு வருத்தத்திற்குறிய செய்தியே. தற்போது கோடை விடுமுறையை டார்கெட் செய்து சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம்  வசூலில் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது.

அதே நேரம் இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான சிதம்பரம் எழுதி இயக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, கணபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இது பாக்ஸ் ஆபிஸில் ரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது. கிரீஷ் ஏடி இயக்கிய பிரேமலு படத்தில் நஸ்லென், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.136 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ராகுல் சதாசிவன் இயக்கிய பிரம்மயுகம், நடிகர்கள் மம்முட்டி, அர்ஜுன் அசோகன் மற்றும் பலர் நடித்த பிரமயுகம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.58.96 கோடியாக உள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த ஆடு ஜீவிதம் படத்தில் கே.ஆர்குல், அமலா பால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இதுவரை 155 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஜித்து மாதவன் எழுதி இயக்கிய ஆவேஷம் படத்தில் ஃபஹத் பாசில், சஜின் கோபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரூ 150 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Also read… Movies List : இந்த வாரம் தியேட்டரில் வரிசைக்கட்டும் படங்கள் லிஸ்ட் இதோ!

வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கிய வர்ஷங்களுக்கு ஷேஷம்  படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகளவில் ரூ. 81.88 கோடி வசூல் செய்துள்ளது.  அறிமுக இயக்குநர் டார்வின் குரியாகோஸ் இயக்கிய அன்வேஷிப்பின் கண்டெத்தும் படத்தில் டோவினோ தாமஸ், சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ 40 கோடி வசூல் செய்தது. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கிய ஆபிரகாம் ஓஸ்லர் ஜெயராம், ஜெகதீஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 40.53 கோடி வசூல் செய்துள்ளது. இதன் விளைவாக இந்திய சினிமாவில் 1000 கோடி வசூல் இலக்கை மலையாள சினிமா ஆண்டு தொடங்கி 5 மாதத்திலேயே எட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் மலையாள சினிமாவில் வெளியான ‘2018’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘ரோமாஞ்சம்’, ‘நேரு’ ஆகிய படங்கள் மொத்தமாகவே ரூ.500 கோடி வசூலை குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 மாதங்களில் ரூ.1,000 கோடியை வசூலித்து முன்னேறியிருக்கிறது மலையாள திரையுலகம்.

Latest News