பிரபல திரைப்பட தொகுப்பாளர் காலமானார்.. கங்குவா பட குழுவினர் அதிர்ச்சி! - Tamil News | Malayalam Movie Editor Nishadh Yusuf Passed Away Who also part with surya's kanguva movie | TV9 Tamil

பிரபல திரைப்பட தொகுப்பாளர் காலமானார்.. கங்குவா பட குழுவினர் அதிர்ச்சி!

Editor Nishadh Yusuf Death: மலையாள திரைப்படத்தின் தொகுப்பாளர் நிஷாத் யூசுப்  இன்று காலமானார். கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் இறந்து கிடந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உடலை போலீசார் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல திரைப்பட தொகுப்பாளர் காலமானார்.. கங்குவா பட குழுவினர் அதிர்ச்சி!

நிஷாத் யூசப் காலமானார்

Updated On: 

30 Oct 2024 08:12 AM

மலையாள திரைப்படத்தின் தொகுப்பாளர் நிஷாத் யூசுப்  இன்று காலமானார். கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் இறந்து கிடந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உடலை போலீசார் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். அவர் அடியோஸ் அமிகோ, ஆலப்புழா ஜிம்கானா, எக்சிட், சாவீர், அலங்கம், ராமச்சந்திர போஸ் & கோ உள்ளிட்ட படங்களுக்கு பட தொகுப்பு செய்துள்ளார்.

பிரபல திரைப்பட தொகுப்பாளர் காலமானார்

குறிப்பாக, தமிழில் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள சூர்யாவின் கங்குவா படத்திற்கு பட தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தல்லுமாலா படத்திற்கு சிறந்த தொகுப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருதை நிஷாத் பெற்றார். சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடத்துள்ளனர். கங்குவா திரைப்படத்தின் போஸ்டர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.

கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில், அடுத்த மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம்.

Also Read : நடிகர் விஜய்க்கு டப் கொடுத்து அவரை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

3டி முறையில் உருவாகி இருக்கும் இந்த படம், 36 மொழிகளில் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

கங்குவா பட குழுவினர் அதிர்ச்சி

இந்த சூழலில் கங்குவா படக் குழுவினருக்கு இன்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, கங்குவா படத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய  நிஷாத் யூசுப் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு கங்குவா படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவரது மறைவுக்கு படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவர் மலையாள படங்களிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன்படி, அடியோஸ் அமிகோ, ஆலப்புழா ஜிம்கானா, எக்சிட், சாவீர், அலங்கம், ராமச்சந்திர போஸ் & கோ, யமஹா, சவுதி வெள்ளக்கா, தல்லுமாலா, ஊடல், ஆயிரத்தெட்டு பொய்கள், ஆபரேஷன் ஜாவா, உண்டா, டிராகுலா, ரகுவின் சொந்த ரசியா, பஸூகா உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தல்லுமாலா படத்திற்காக சிறப்பு தொகுப்பாளர் விருதை பெற்றுள்ளார்.

Also Read: பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேனா? நடிகை நயன்தாரா விளக்கம்

நிஷாத் யூசுப் மரணத்தை தயாரிப்பாளர் என்.எம்.பாதுஷாவும், நடிகை மாலா பார்வதியும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.  இவரது மறைவு மலையாள திரையுலக்கிற்கும், கங்குவா படக்குழுவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?
ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்புகள் இவைதான்!
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!