5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் மலையாள ஸ்டார்களின் படங்கள் லிஸ்ட்!

Malayalam OTT Releases: மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் மம்முட்டி, பிரித்விராஜ், நிவின்பாலி ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டர்போ, குருவாயூரில் அம்பல நடையில், மலையாளி ஃப்ரம் இந்தியா ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படங்கள் எப்போது, எந்த ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் மலையாள ஸ்டார்களின் படங்கள் லிஸ்ட்!
படங்கள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2024 18:24 PM

கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையாள ரசிகர்கள் தாண்டி பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது.  ஆணாதிக்கம் நிறைந்த கணவனை ஒரு பெண் எப்படி கையாள்கிறாள், சமூகத்தில் தனித்து நின்று தனது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்கிறாள் என்பதை நகைச்சுவையுடன் இந்தப் படம் சொன்னது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’. இதில் பசில் ஜோசப், பிருத்விராஜ், அனஸ்வர ராஜன், நிகிலா விமல், ரேகா ஆகியோருடன் யோகி பாபுவும் நடித்துள்ளார். இந்தப் படம் மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலைப் பெற்ற இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகின்ற ஜூன் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘ஜன கண மன’ படத்தின் மூலம் திரையுலகில் அழுத்தமாக கால்பதித்தவர் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வந்த திரைப்படம் ‘மலையாளி ஃபரம் இந்தியா’. நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், தயன் ஸ்ரீனிவாசன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஊரில் எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக இருக்கும் இளைஞராக நிவின் பாலி இந்த படத்தில் நடித்துள்ளார். சும்மாவே எப்படி இருப்பது என ஒரு கட்சிக்கு பரப்புரை செய்யும் வேலையை பார்க்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனை காரணமாக அந்த ஊரை விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போய் விடலாம் என நினைக்கிறார். காமெடி ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மலையாளி ஃப்ரம் இந்தியா திரைப்படம் ஜுலை 5 ஆம் தேதி சோனி லைவில் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ’கன்னூர் ஸ்குவாட்’, ‘காதல் தி கோர்’ ஆகிய மூன்று படங்களும் ஹட்ரிக் வெற்றியை கொடுத்தது. மூன்று வெவ்வேறு கதைக் களத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் மம்முட்டி. பிளாக்பஸ்டர் ஹாரர் பீரியட் படமான பிரம்மயுகம் படத்திற்கு பிறகு மம்மூட்டியின் நடிப்பில் பேக் – பேக் இரு படங்கள் வெளியானதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இயக்குநர் வைசாக் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்த படம் ‘டர்போ’. ஏற்கெனவே வைசாக் இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். ’டர்போ’ படத்தில் மம்மூட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, தெலுங்கு நடிகர் சுனில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் காமெடி ஆகிய இரு ஜானரும் சேர்த்து எடுக்கப் பட்டிருக்கும் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் முதல் வாரத்தில் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read… Kamal Haasan : ‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ – கமல்ஹாசன் பகிர்ந்த விஷயம்.. மீள்பார்வை!

Latest News