Kantara 2 Update : ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 2’ல் இணையும் பிரபல மலையாள நடிகர்!
Rishab Shetty : தென்னிந்தியத் திரைப்படங்களில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி வருகிறது
கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும், பட இயக்குநராகவும் இருந்துவருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது காந்தாரா. சுமார் ரூ 16 கோடி பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் சுமார் ரூ 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. கர்நாடக மாநிலத்தில் காடுகள் பகுதியில் இருக்கும் தெய்வமான “பஞ்சுருளி” என்ற காவல் தெய்வத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்னணி நாயகனாகவும், “பஞ்சுருளி” தெய்வத்தினை தன்மீது இறக்கி ஆடுபவராகவும் நடித்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து சப்தமி கவுடா, அச்யுத் குமார் மற்றும் கிஷோர் என பலரும் இணைந்து நடித்திருந்தனர். பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்லே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் காந்தாரா பாகம் 2 இயக்கப்போவதாகக் கூறியிருந்த நிலையில், இப்படத்திலும் ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
காந்தாரா 2 படத்தில் இணைந்த மலையாள பிரபலம்:
காந்தாரா 1 வெற்றியினை தொடர்ந்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி தற்போது ” காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1″ என்ற திரைப்படத்தினை இயக்கிவருகிறார். இப்படத்திலும் ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
கர்நாடகா பகுதிகளில் வனத்தின் காவல் தெய்வமான பஞ்சுருளி தெய்வத்தின் கதைக்களத்துடன் மார்டன் உலகத்தில் உருவாகிவரும் இப்படத்தில்,மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியநிலையில், தற்போது அவர் இப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல தமிழ், மற்றும் மலையாள நடிகராகத் திகழும் நடிகர் ஜெயராமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இவர் நடிகர் மோகன் லால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக, தற்போது ஜெயராம் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:‘மிஸ் யூ’ முதல் ‘சூது கவ்வும் 2’ வரை.. இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள்!
காந்தாரா பாகம் 2 உருவான கதை:
காந்தாரா 1ன் வெறியை அடுத்தாக மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் வெளியாகி வரும் திரைப்படம் “காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1”. இப்படமானது சுமார் ரூ 125 முதல் ரூ 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் காந்தாரா பாகம் 1ல் நடித்த சப்தமி கவுடா மற்றும் கிஷோர் பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி நடிகர் ஜெயராமனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. காந்தாரா பாகம் ஒன்றைத் தயாரித்த “ஹோம்லே பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனம், இந்த பாகம் இரண்டையும் தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க:நடிகர் அஜித் வெளியிட்ட பரபர அறிக்கை.. ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரையும், வேண்டுகோளும்!
இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் பி.அஜனீஷ் இப்படத்தில் இசையமைத்து வருகிறார். காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1ன் முதல் போஸ்டர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில், தொடர்ந்து இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படமானது வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தினை அடுத்தாக நடிகர் ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா 2 திரைப்படத்தினை தொடர்ந்து, தெலுங்கு திரைப்பட இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் அனுமன் என்ற திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இந்த திரைப்படம் தற்போது முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில், இப்படம் வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து வரும் திரைப்படங்கள்:
காந்தாரா 2 திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த வரலாற்றுக் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் ரிஷப் ஷெட்டி, அனுமன் படத்தினை தொடர்ந்து தற்போது இந்தி திரைப்பட இயக்குநர் சந்தீப் சிங் இயக்கத்தில் “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இப்படத்தின் மூலமாக இந்தியிலும் சாதனை படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரலாறு சார்ந்த கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவரும் ரிஷப் ஷெட்டியின் கைவசத்தில் தற்போது 3 படங்கள் உள்ளனர். இதில் ஆண்டுக்கு ஒரு திரைப்படம் என 2025, 2026 மற்றும் 2027 எனத் தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:‘ஜெயிலர் 2’ ரிலீஸ் அடுத்த வருஷமா..? மாஸ்டர் பிளான் போடும் இயக்குநர் நெல்சன்!