TTF Vasan: அன்று தங்கம்.. இன்று குப்பை.. டிடிஎஃப் வாசனை கடுமையாக விமர்சித்த செல்அம்!
செயல்பாடுகளால் ஒரு மனிதன் ஒருமுறை தவறு செய்யலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் தப்பு பண்ணக்கூடாது, பொய் பேசக்கூடாது. நான் ஏற்கனவே படம் எடுத்த இயக்குநர். எனக்கிருக்கும் முதிர்ச்சிக்கு நான் ஊடகத்தினரை அழைத்து அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்குகிறேன் என அறிவித்தேன். சூழ்நிலைகள் காரணமாக எனவும் சொன்னேன். ஆனால் அந்த செய்தியாளர் சந்திப்பில் எல்லா காரணத்தையும் நான் சொல்ல முடியும்.
மஞ்சள் வீரன்: மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் ஏன் நீக்கப்பட்டார் என்பதை இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருக்கும் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து இயக்குநரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என வீடியோ வெளியிட்டு வருகிறார். இப்படியான நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் செல்அம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பேசாமல், நேராக ஊடகத்தினரிடன் ஏன் சொன்னேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தார். அதாவது, “டிடிஎஃப் வாசனிடம் சொல்லி விட்டு செய்யும் அளவுக்கு அவர் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. என்னுடைய கண்களுக்கு அவரின் செயல்கள் உயர்வாக தெரியவில்லை.முதலில் டிடிஎஃப் வாசன் எனக்கு தங்கமாக தெரிந்தார். ஒருவரை நாம் வேண்டாம் என தூக்கி எறிகிறோம், அதுவும் அவரிடம் சொல்லாமல் தூக்கி எறிகிறோம் என்றால் யோசித்து பாருங்கள். அன்றைக்கு தங்கமாக தெரிந்தவர், இப்போது குப்பையாகி விட்டார். இதுதான் காரணம்” என தெரிவித்துள்ளார்.
Also Read: பெண்களுக்கு மட்டுமல்ல.. இனி உங்களுக்கும் பேருந்தில் இலவசம்.. அமைச்சர் முக்கிய உத்தரவு!
மேலும், “ஒருபொருளை குப்பையில் போட 2 காரணம் தான் இருக்கும். ஒன்று அப்பொருள் நமக்கு தேவைப்படாத ஒன்றாக இருக்கும். 2வது வீட்டிலேயே அந்த பொருளை வைத்தால் துர்நாற்றம் வீசும்.செயல்பாடுகளால் ஒரு மனிதன் ஒருமுறை தவறு செய்யலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் தப்பு பண்ணக்கூடாது, பொய் பேசக்கூடாது. நான் ஏற்கனவே படம் எடுத்த இயக்குநர். எனக்கிருக்கும் முதிர்ச்சிக்கு நான் ஊடகத்தினரை அழைத்து அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்குகிறேன் என அறிவித்தேன். சூழ்நிலைகள் காரணமாக எனவும் சொன்னேன். ஆனால் அந்த செய்தியாளர் சந்திப்பில் எல்லா காரணத்தையும் நான் சொல்ல முடியும். ஒருவர் வேண்டாம் என்றால் விட்டு விட வேண்டும். அவனுக்கு சுய அறிவு இருந்தால் முன்னேறி வரட்டும் என நினைத்தேன்.
Also Read: Crime: நாமக்கலில் கருக்கலைப்பு செய்ய முயன்ற பள்ளி மாணவி உயிரிழப்பு.. காதலன் கைது!
பார்த்தால், டிடிஎஃப் வாசன், இயக்குநர் என்னை சீட்டிங் செய்து விட்டார் என சொல்லி என் புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டார். அதனை 11 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதன்மூலம் கண்டிப்பாக ரூ.3 லட்சம் வருமானம் வந்திருக்கும். அதன்மூலம் இன்றைக்கும் என்னுடைய உழைப்பை டிடிஎஃப் வாசன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். எனக்கு தனியாக யூட்யூப் சேனல் கிடையாது. என்ன சொன்னாலும் அந்த தம்பி கேட்க மாட்டான். நான் 3 வருஷமாக படம் எடுக்கவில்லை என டிடிஎஃப் வாசன் சொன்னார். நான் அவருடன் சேர்ந்து சுற்றியது எல்லாம் கணக்கில் வராது.
மஞ்சள் வீரன் படத்தின் பூஜை கடந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நடந்தது. இன்றைய தேதி வரை ஒன்னே கால் வருடம் தான் ஆனது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் மக்கள் எது வேண்டுமானாலும் எளிதாக நம்பிவிடுகிறார்கள். டிடிஎஃப் வாசன் தன்னுடைய செயல்களை திருத்த வேண்டும். இளைஞர்களை கெடுப்பதை நிறுத்த வேண்டும். உயர்ந்த சிந்தனை வைத்துக் கொண்டால் அவர் கண்டிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார். படத்தின் பூஜை போட்டவுடன் அவர் ஜூலை , ஆகஸ்ட் மாதம் ஸ்ரீதர் மாஸ்டரிடன் டான்ஸ் கிளாஸ் சென்றான். ஒருபக்கம் யூட்யூப் சேனலை கவனித்தால் மற்றொரு பக்கம் கிளாஸூக்கு லேட்டா தான் வருவார். சரி என செப்டம்பரில் ஷூட்டிங் போகலாம் என்றால் மகாராஷ்ட்ரா போகிறேன் என சொன்னான். நான் எவ்வளவோ தடுத்தேன். ஆனால் அதையும் மீறி சென்று காஞ்சிபுரம் விபத்தில் சிக்கினான். அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். நவம்பரில் தான் ரிலீஸ் ஆனான். டிசம்பர் மாதம் முழுக்க சென்னையில் இருந்து காஞ்சிபுரம் சென்று போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு வந்தான். அப்படி இருக்கும்போது என்னால் எப்படி ஷூட்டிங் செல்ல முடியும்.
பைக் விபத்தில் சிக்கியதால் அவனுக்கு அடிபட்டது. இதனால் 2024ல் 3 மாதம் ஷூட் போக முடியவில்லை. சரி என ஏப்ரல் கூப்பிட்டால் கட்சிக்காக பிரசாரம் செய்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் படத்தை தயாரிக்க பணம் போடுகிறோம் என சொன்ன தயாரிப்பாளர்கள் விலகி போனார்கள்” என இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.