5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஜினி, அஜித், மோகன்லால், மம்முட்டியிடம் உள்ள பொதுவான குணங்கள் – மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல்

தற்போது விடுதலை 2, ரஜினியுடன் 'வேட்டையன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், அடுத்த மாதம் 10-ம் தேதி வேட்டையன் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'மனசிலாயோ' பாடலில் மஞ்சு வாரியரின் தோற்றம் மற்றும் நடனம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

ரஜினி, அஜித், மோகன்லால், மம்முட்டியிடம் உள்ள பொதுவான குணங்கள் – மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல்
மஞ்சு வாரியர்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Sep 2024 17:43 PM

நடிகர்கள் ரஜினி, அஜித், மோகன்லால் மற்றும் மம்முட்டியிடம் உள்ள பொதுவான குணங்கள் என்று நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் பேட்டி ஒன்றியில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயிலில் 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார் நடிகை மஞ்சு வாரியர். இவரது குடும்பத்தினர் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில்உ உள்ள புல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மஞ்சுவாரியர் நாகர்கோயிலில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்தார். பின்னர் அவரது தந்தைக்கு பணி உயர்வு கிடைத்தப் பின்னர் இவர்கள் குடும்பம் கேரளாவில் உள்ள கண்ணூருக்கு சென்றுவிட்டனர்.

1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17. இவர் நடித்த படங்களில் குறிப்பிடும்படியானது என்றால், அவை தூவல் கொட்டாரம், சல்லப்பம், ஏ புழையும் காடானு மற்றும் ஆராம் தம்புரான் ஆகியவை ஆகும். தொடர்ந்து கதையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் மஞ்சு வாரியார் மக்கள் மனதில் நங்கூரமாய் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

மலையாள படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியரை தன்னுடைய அசுரன் படம் மூலம் கோலிவுட் அழைத்து வந்தார் வெற்றிமாறன். அந்த படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் மஞ்சு வாரியர். அடுத்ததாக அஜித் குமாருடன் சேர்ந்து துணிவு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். முதலில் தனுஷ், அடுத்து அஜித் குமாரா என தமிழ் ரசிகர்கள் வியந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிவிட்டார்.

Also read… நடிகர் முகேஷ் மீதான பாலியல் வழக்கு… விசாரணைக்காக கேரளாவில் இருந்து சென்னை வந்த போலீஸ் குழு!

தற்போது விடுதலை 2, ரஜினியுடன் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், அடுத்த மாதம் 10-ம் தேதி வேட்டையன் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ‘மனசிலாயோ’ பாடலில் மஞ்சு வாரியரின் தோற்றம் மற்றும் நடனம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

Also read… கோலிவுட் சினிமாவில் தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 பெரிய படங்கள் – ஹிட் அடிக்கப்போவது யார்?

படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.

இந்நிலையில், மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் மற்றும் அஜித்திடம் உள்ள பொதுவான குணங்கள் குறித்து மஞ்சுவாரியர் பகிர்ந்துள்ளார். நான்கு பேருடனும் பணிபுரிந்துள்ள மஞ்சு வாரியர், அவர்கள் பெரிய நட்சத்திரங்களாக இருந்தபோதிலும் நம்பமுடியாத அளவிற்கு அடக்கமாக இருப்பதாகவும் இது அவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்றும் கூறியுள்ளார். இது சினிமா வட்டாரங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Latest News