மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் வருவது குகை அல்ல, பணக்குழி… இயக்குநர் சிதம்பரம்

குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா? அவனை காப்பாற்ற முடியுமா? என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமாக இருந்தது.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் வருவது குகை அல்ல, பணக்குழி... இயக்குநர் சிதம்பரம்

இயக்குநர் சிதம்பரம்

Published: 

02 Dec 2024 18:34 PM

மலையாளத்தில் உருவாகி பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றிப் பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப் படத்தில் வருவது குகை அல்ல, பணக்குழி என்று இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் சௌபின், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்த படம் மஞ்சுமல் பாய்ஸ். நடிகர் சௌபின் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தார். கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலா வந்த நிலையில் அந்த நண்பர்களில் ஒருவர் டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிடுகிறார். உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையை மையமாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது.

அபாயகரமான டெவில்ஸ் கிச்சன் குகை பகுதியில் நடிகர் கமல் தனது நடிப்பில் குணா படத்தை எடுத்த பிறகே அந்தக் குகை குறித்து வெளி உலகுக்கு தெரியவந்தது. அன்று முதல் அந்த குகை, குணா குகை என்று மக்களால் அழைக்கப்படுகிறது. குணா படத்தில் இடம்பெறும் கண்மணி அன்போட… பாடல் காட்சி அங்கு வைத்துதான் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்து குணா குகைக்கு கேரளாவில் இருந்து சென்றவர்கள்தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளம், தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.

Also read… காதலை கொண்டாடும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

குணா படத்தின் கண்மணி அன்போடு… பாடலோடுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைட்டில் தொடங்கும். குணா குகை குழிக்குள் விழுந்த நண்பனை மேலே மீட்டு வருகையில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற குணா படத்தில் கமல் பேசிய வசனம் ஒலிக்கும்.

குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா? அவனை காப்பாற்ற முடியுமா? என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமாக இருந்தது. அந்த நேரத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற பாடல் வரி ஒலித்து திரையரங்கிள் உள்ள ரசிகர்களின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

இதில் குழியில் விழுந்த தனது நண்பனை காப்பாற்றும் கதாப்பாத்திரத்தில் நடிகர் சௌபின் நடித்திருந்தார். குழியில் விழுபவராக ஸ்ரீநாத் பாசி நடித்திருந்தார். நட்பினை கொண்டாடும் விதமாக குணா படத்தில் வெளியான கண்மணி பாடலை படக்குழு அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

Also read… விறுவிறுப்பாக நடைபெறும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் எப்போ முடியும்? இணையத்தை கலக்கும் மாஸ் அப்டேட்

படம் வெளியாகி மலையாளம் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது மட்டும் இன்றி படமும் படக்குழுவினரும் அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கினர். அதில் நடிகர் சௌபின் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்காக போடப்பட்ட குணா குகை செட் குறித்து இயக்குநர் சிதம்பரம் பேசியுள்ளார். அதில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவீத பணம் அந்த குகையை உருவாக்கவே செலவானது. அது குகை அல்ல, பணக்குழி என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..