அஜித் படத்துக்கு அடுத்து ‘மார்க் ஆண்டனி 2’ படமா? ஆதிக் ரவிச்சந்திரன் பிளான் இதுதான்!

Director Adhik Ravindran : தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

அஜித் படத்துக்கு அடுத்து மார்க் ஆண்டனி 2 படமா? ஆதிக் ரவிச்சந்திரன் பிளான் இதுதான்!

மார்க் ஆண்டனி 2 திரைப்படம்

Published: 

17 Dec 2024 11:27 AM

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகத் திரைப்படங்களில் பணியாற்றிய ஆதிக் ரவி சந்திரன். 2015ம் ஆண்டு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, தபாங் போன்ற திரைப்படங்களை இயக்கி பெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில் இவர் தற்போது நடிகர் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க :இணையத்தில் கவனம் பெறும் SK25 படத்தின் பூஜை வீடியோ!

இந்நிலையில் இவரின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷாலின் முன்னணி நடிப்பில் நகைச்சுவை கலந்த ஆக்ஷ்ன் திரைப்படமாக வெளியாகியது. இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் மார்க் ஆண்டனி 2 திரைப்படம் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மார்க் ஆண்டனி படம் வெளியாகி சுமார்  ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் ஹிட்டை அடுத்தாக தற்போது அஜித்தை முன்னணி கதாநாயகனாக வைத்து மாறுபட்டகதைக்களத்துடன் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தை புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தினை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தைத் தானே இயக்கி அதில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை எழுதி இயக்குவதற்கு இன்னும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. ஆதலால் நடிகர் விஷால் முதலில் மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :சூரி நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் இதோ!

இயக்குநர் ஆதிக் ரவி சந்திரனின் இயக்கத்தில் மற்றும் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி வரும் ஆண்டி களமிறங்கும். முன்னதாக, அஜித் நடித்த மற்றொரு திரைப்படமான விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் திருநாளோடு வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டு பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்திகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க :ஜெயம் ரவியின் JR 34 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது படக்குழு!

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்
கொய்யா பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகள்!