5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

KGF பட சிறுவனா இது? ஆளே மாறிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்!

கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் மற்றும் சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இதில் யாஷின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் அன்மோல் விஜய் பட்கல் என்ற சிறுவன் நடித்திருந்தான்.

KGF பட சிறுவனா இது? ஆளே மாறிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்!
அன்மோல் விஜய் பட்கல்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 May 2024 14:13 PM

கன்னட திரையுலகம் என்றாலே பிறமொழி படங்களை ரீமேக் செய்வார்கள் என்கிற பிம்பம் இருந்த நிலையில், அதையெல்லாம் தகர்த்தெறிந்து தங்களிடமும் தரமான கதையம்சம் கொண்ட படங்கள் இருக்கிறது என்பதை உலகறிய செய்த திரைப்படம் தான் கேஜிஎப். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இப்படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் நடிகர் யாஷ். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தின் அதிரடியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை வேற லெவல் மாஸாக எடுத்து பான் இந்தியாவையே அதிரவிட்டார் இயக்குநர் பிரசாந்த் நீல். கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது.

கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் மற்றும் சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இதில் யாஷின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் அன்மோல் விஜய் பட்கல் என்ற சிறுவன் நடித்திருந்தான்.

Also read… ’கோட்’ படத்தின் புதிய அப்டேட் கொடுத்த யுவன்… வைரலாகும் வீடியோ!

கேஜிஎஃப் படத்தில் ஃப்ளாஸ்பேக் காட்சியில் யாஷின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்த அன்மோல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருப்பார். நடிப்பில் ஆர்வம் கொண்ட அன்மோல் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால் கேஜிஎஃப் படத்தின் மூலம் அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட அன்மோல், ஒன்பது வயதிலிருந்தே நடனம் கற்று வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anmol (@anmol_._bhatkal)

கேஜிஎஃப் படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தினார் அன்மோல். தற்போது அன்மோலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் சிறுபிள்ளைத்தனமான யாஷாக காணப்பட்ட அன்மோல், தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News