5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theatre Release Movies: மெய்யழகன் முதல் தேவாரா வரை… தியேட்டரில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்

Movie Update: கோலிவுட்டில் செப்டம்பர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் கடந்த 3-வது வாரம் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த 4-வது வாரம் தமிழ் சினிமாவில் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

Theatre Release Movies: மெய்யழகன் முதல் தேவாரா வரை… தியேட்டரில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்
மெய்யழகன், தேவாரா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Sep 2024 16:31 PM

தற்போது கார்த்தியின் 27-வது படத்தை ‘96’ படத்தை எடுத்து புகழ் பெற்ற இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கியுள்ளார். கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிக்கும் படம் ‘ஹிட்லர்’. இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக் – மெர்வின் இசையமைக்கும் இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் ‘மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகராக இருந்த சதீஷ்இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குநர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ளபடம் ‘பேட்ட ராப்’. ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தில் ராஜா. இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சத்யாவும், நாயகியாக ஷெரீன் நடித்துள்ளனர். அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தை கோல்டன் ஏஞ்சல்ஸ் ஸ்டூடியோ சார்பில் கோவை பாலாசுப்பிரமணியம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காமெடி வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இயக்குநர் கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தேவாரா பகுதி 1. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை ஜான்வி கபூர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Latest News