உடல் அமைப்பு குறித்து ஆபாச கமெண்ட்… நெத்தியடி பதிலளித்த மிருணாள் தாகூர்!
Mrunal Thakur: சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக பேமிலி ஸ்டார் படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், உடல் அமைப்பை பற்றி எழும் தவறான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
சின்னத்திரை நடிகையாக இந்தியில் தனது பயணத்தை தொடங்கி இன்று பான் இந்தியன் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மான் ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மிருணாள் தாகூர் இன்று வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகையாக கலக்கி வருகிறார். பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் நடிக்கும் படங்கள் வரவேற்பை பெற்று வருவதாலும் அவருக்கான மார்க்கெட் எகிறியுள்ளது. புதிய படங்களில் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் மிருணாளை நடிக்க வைப்பதற்கு படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
Also read… ”எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை”.. பிரபல நடிகை ஓபன் டாக்!
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக பேமிலி ஸ்டார் படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், உடல் அமைப்பை பற்றி எழும் தவறான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ” என்னுடைய Pear ஷேப் உடம்பை பார்த்து பலரும் கேலி செய்தார்கள். அதற்காக நான் அதை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை” என்று மிருணாள் தாகூர் தெரிவித்து இருக்கிறார்.