5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“120 ரூபாயில் கோபுரம் கட்டப்போவதில்லை” – சர்ச்சையில் சிக்கிய எம்.எஸ்.பாஸ்கர்!

MS Bhaskar : பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ கூட கோபுரமோ கட்டப் போறதில்லை என எம்.எஸ். பாஸ்கர் பேசியுள்ளார். ரசிகர்கள் டிக்கெட் காக கொடுக்கும் விலை ஒரு குடும்பத்தையே வாழவைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் கூறினார். ஒரு படம் வெளியாகும் போது அதில் பல கலைஞர்கள் உழைப்பார்கள் என்றும் இது போன்ற விமர்சனங்களால் அந்த படம் தோல்வியுற்று, அதில் வேலை செய்தோரின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

“120 ரூபாயில் கோபுரம் கட்டப்போவதில்லை” – சர்ச்சையில் சிக்கிய எம்.எஸ்.பாஸ்கர்!
எம்.எஸ்.பாஸ்கர்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jun 2024 16:14 PM

தியேட்டர் டிக்கெட்டுக்கு நீங்க கொடுக்குற 120 ரூபாயில கோபுரம் ஒன்னும் கட்டப்போறதில்லை என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவுக்கு வந்து ஒரு படத்தை பார்த்தீர்கள் என்றால் படம் பிடித்திருந்தால், பாராட்டுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருந்து விடுங்கள். உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ படத்தை போய் பார்க்க வேண்டாம் என சொல்லாதீங்க என எம்,எஸ். பாஸ்கர் பேசியுள்ளார். எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பை ஏகப்பட்ட ரசிகர்கள் ரசித்து வரும் நிலையில், அவரிடம் இருந்து இப்படியொரு வார்த்தை வரும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் மக்களை பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாமல் வெறும் சினிமாக்காரராகவே எம்.எஸ். பாஸ்கர் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராட்சசன், கட்டா குஸ்தி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட விஷ்ணு விஷாலின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷாஜி சலீம். விதார்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.  ‘லாந்தர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “பொதுமக்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். படம் உங்களுக்குப் பிடிக்குதா நாலுபேரிடம் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களுடனே அதை வைத்துகொள்ளுங்கள். படம் பார்க்க செல்பவர்களிடம், ‘அந்தப் படம் நல்லா இல்லை பார்க்க போகாதீர்கள்’ என்று சொல்லாதீர்கள்.

பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ கூட கோபுரமோ கட்டப் போறதில்லை என எம்.எஸ். பாஸ்கர் பேசியுள்ளார். ரசிகர்கள் டிக்கெட் காக கொடுக்கும் விலை ஒரு குடும்பத்தையே வாழவைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் கூறினார். ஒரு படம் வெளியாகும் போது அதில் பல கலைஞர்கள் உழைப்பார்கள் என்றும் இது போன்ற விமர்சனங்களால் அந்த படம் தோல்வியுற்று, அதில் வேலை செய்தோரின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Also read… OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா?

அதுபோல கஷ்டப்பட்டு எடுக்கும் படங்களை செல்ஃபோன் கையில் இருக்கும் ஒரே காரணத்தினால், திரையரங்கில் அமர்ந்து கொண்டு படம் மொக்க என பதிவிடுகிறார்கள். ‘இந்தப் படத்துக்கு தயவு செய்து வந்துவிடாதீர்கள்’ என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். எல்லோரும் பார்க்கட்டும் என்றும் பேசியிருந்தார்.

நல்ல படத்தை எடுக்க வேண்டும் என சினிமா கலைஞர்களுக்கு அறிவுரை வழங்காமல் படம் நல்லா இல்லை என விமர்சிக்கக் கூடாது என எம்.எஸ். பாஸ்கர் பேசுவது சரியல்ல என நெட்டிசன்கள் அவருக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Latest News