5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GV Prakash Kumar : ஜீ.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து அறிவிப்பு..

G.V Prakash - Santhavi: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

GV Prakash Kumar : ஜீ.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து அறிவிப்பு..
ஜிவி – சைந்தவி
intern
Tamil TV9 | Updated On: 12 Nov 2024 15:37 PM

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வலம் வந்தன. உதயம் என்.ஹெச் 4 படத்தில் யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் ஆகியவை இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்களாக அமைந்தன.

தற்போது இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்து இருப்பது சினிமா பிரபலங்களை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஜி.வி மற்றும் சைந்தவி இருவரும் பள்ளிக் காலத்திலிருந்து காதலித்து வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு 2020ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பயணித்தனர்.

முற்றுப்புள்ளி வைத்த ஜீ.வி பிரகாஷ்

விவாகரத்து குறித்து விளக்கம் அளித்துள்ள இசை அமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ், “நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.

 

View this post on Instagram

 

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

இந்த தனிப்பட்ட எங்களது கருத்துக்கு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கு ஒருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதலும் ஆதரவும் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். இதே தகவலை சைந்தவியும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா!

Latest News