விவாகரத்து தொடர்பாக சோசியல் மீடியாக்களில் அவதூறு… எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிய ஏ ஆர் ரகுமான்
சில தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார் ஏ ஆர் ரகுமான். அதில், இந்த உடைந்த இதயங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக்கூடும், இதய சிதைவுகள் தங்கள் இடத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து தொடர்பாக சோசியல் மீடியாக்களில் அவதூறு பரப்புவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளார். கடந்த 19-ம் தேதி தங்களது 29 ஆண்டு கால திருமண உறவைப் விட்டுப் பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு ஆகியோர் அறிவித்தனர். இது ரசிகரக்ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியான பிறகு சமூக வலைதளங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறித்தும் அவரது மனைவி சாயிரா பானு குறித்தும் பல்வேறு வதந்திகள் உலா வரத் தொடங்கியது. இதற்கு ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் மகள் என குடும்ப உறுப்பினர்கள் தங்களது வலி நிறைந்த எதிர்ப்பை சமூக வலைதளம் மூலம் பதிவிட்டு வந்தனர்.
இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகன் என்று ரசிகரக்ளால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து கோலிவுட், பாலிவுட் என பிசியாக இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை விட்டு விலகுவதாக இவர் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பல வதந்திகளும் பரவத் தொடங்கியது. இதுகுறித்து ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தனது சமூகவலைதள பக்கத்தில் தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள் என்று வேதனையான பதிவை வெளியிட்டார். அதில் என் அப்பா ஒரு லெஜண்ட் என்றும் இசைத்துறையில் அவர் செய்த சாதனைக்காக மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை, அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் லெஜண்ட்டாக இருக்கிறார் என்றும் அமீன் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏ ஆர் ரகுமான் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். 3 பக்கங்களை கொண்ட அந்த நோட்டீஸில் 8 பாயிண்ட்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ஏ ஆர் ரகுமானின் வழக்கறிஞர் கூறியிருப்பதாவது…
Also read… புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 – சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்
எனது கட்சிக்காரர் சில தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அதில், இந்த உடைந்த இதயங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக்கூடும், இதய சிதைவுகள் தங்கள் இடத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.
Notice to all slanderers from ARR’s Legal Team. pic.twitter.com/Nq3Eq6Su2x
— A.R.Rahman (@arrahman) November 23, 2024
இது தொடர்பான செய்திகள் பிரபல பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்த இந்த முடிவில் எனகது கட்சிக்காரரின் நலன் விரும்புகளும், ஆதரவாளர்களும் அவருக்கு ஆருதல் அளிக்கும் விதமாக தொடர்ந்து செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் சில சமூக வலைதள பக்கங்களிலும் சில யூடியூப் வீடியோக்களிலும் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாயிரா பானு பிரிவை குறித்து பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். சிலர் அவர்களின் தனிபட்ட வாழ்க்கை குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தேவையற்ற செயல் ஆகும்.
Also read… சினிமா துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் – தமன்னா
இது குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான் அந்த செய்திகளில் எதுவும் உண்மை இல்லை என்றும் அவ்வாறான செதிகள் அவரையும் அவரது குடும்பத்தையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பரப்பப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கீழ்தரமான செயல்களை சில யூடியூப் நிறுவனங்கள் செய்கின்றது.
சமூக வலைதளத்தில் யூடியூப் பக்கங்களிலும் சிலர் கற்பனையில் வெளியிட்ட பதிவுகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.