5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’ஆடு ஜீவிதம்’ மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா ஏ ஆர் ரகுமான்?

சமீபத்தில் இன்டிபென்டென்ட் பிலிம் பிரிவில் பின்னணி இசைக்காக  ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சார்பாக ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

’ஆடு ஜீவிதம்’ மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா ஏ ஆர் ரகுமான்?
ஏ ஆர் ரகுமான்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Dec 2024 22:01 PM

2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படம் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் மூன்றாவது முறையாக ஆஸ்கர் வெல்வாரா என்று அவரது ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் கடந்த மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாடுக்குச் செல்கிறார். அங்கு உள்ள முதலாளியால் ஏமாற்றப்பட்ட நஜீப் ஆடு மேய்க்கப் பணியமர்க்கப்படுகிறார். பாலைவனத்தில் 700 ஆடுகளுடன் தன்னந்தனியாக நஜீப் வசிக்க நேர்கிறது.

ஒருகட்டத்தில் தன்னையும் ஒரு ஆடாக கருதிக் கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் நஜீப்பின் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் இருந்து நஜீப் எப்படி மீண்டும் தனது சொந்த ஊருக்கு தப்பித்து வருகிறார் என்பது படத்தின் கதை. இந்த கடினமான காலத்தைத் தாண்டி நஜீப் உயிர் எப்படி பிழைத்தார் என்ற உண்மைச் சம்பவத்தை எழுத்தாளர் பென்யாமின் ஆடு ஜீவிதம் என்ற நாவலாக எழுதியிருந்தார்.

அந்த நாவலை அடிப்படையாக கொண்டு அதனடிப்படையில் பிளெஸ்ஸி ஆடு ஜீவிதம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் நஜீப் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருந்தார். அவரது மனைவியாக அமலா பால் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் தியேட்டரில் வெளியான முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிக அளவில் இருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியானது.  தன் உடலை வருத்தி கடினமான உழைப்பைக் கொடுத்து நடித்திருந்த நடிகர் பிரித்விராஜுற்கு இந்த படம் நிச்சயம் தேசிய விருதை பெற்றுத்தரும் என்று நம்பப்பட்டது. அந்த அளவுக்கு பிருத்விராஜ் திரையில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.

Also read… ப்ரீ புக்கிங் கலெக்‌ஷனில் கல்லாகட்டும் புஷ்பா 2… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

பான் இந்தியன் படமாக வெளியான இந்தப் படம் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவித்தது. உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

படத்தில் பிருத்வியின் நடிப்பிற்கு பாராட்டு குவிந்தது போலவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களிடையே அதிக பாராட்டுகளைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் வந்த ‘பெரியோனே ரகுமானே’ என்ற பாடல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Also read… கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகர்… இணையத்தில் வைரலாகும் தகவல்

முன்னதாக ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுக்காக ஆடு ஜீவிதம் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இன்டிபென்டென்ட் பிலிம் பிரிவில் பின்னணி இசைக்காக  ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சார்பாக ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்  2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது தேர்வு பட்டியலில் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த ஆடு ஜீவிதம் படம் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News