Cinema Rewind: நா.முத்துகுமார் பாடல் வரிகளை சிலாகித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார். தன்னுடைய 4-வது வயதில் இவரது தாயை இழந்தார். அப்போதிலிருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். இயக்குநராக வேண்டும் என்று தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நா.முத்துகுமார், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பிறகு சீமான இயக்கித்தில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

Cinema Rewind: நா.முத்துகுமார் பாடல் வரிகளை சிலாகித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்

நா.முத்துகுமார்

Updated On: 

06 Nov 2024 11:35 AM

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் எந்திரன் 2.o படத்திற்கு எழுதிய பாடல் வரிகள் குறித்து இசையமைப்பாலர் ஏ.ஆர்.ரகுமான் சிலாகித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. ஒரு மனிதன் பிறப்பதில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு பருவத்திற்கும், மனிதர்களிடையேயான ஒவ்வொரு உறவின் அற்புதத்தையும் தனது வரிகளின் மூலம் ரசிகர்களிடையே கடத்தியவர் பாடலாசிரியர் நா. முத்துகுமார். காதல், காமம், நட்பு, பாசம் என எல்லா உணர்வுகளையும் தொட்டுச்செல்லும் முத்துகுமாரின் வரிகள். இசையமைப்பாளரின் இசையை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் ஒரு நல்ல பாடலாசிரியரின் வரிகளை கொண்டாடவும் தவறியதில்லை. அந்த வரிசையில் கண்ணதாசன், வாலி, வைரமுத்துவை தொடர்ந்து எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் நா.முத்துக்குமார். அந்த வகையில் நா.முத்துகுமாரின் வரிகள் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் உள்ள ரசிகர்களை வெகு சீக்கிரமே சென்றடைந்தது.

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார். தன்னுடைய 4-வது வயதில் இவரது தாயை இழந்தார். அப்போதிலிருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். இயக்குநராக வேண்டும் என்று தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நா.முத்துகுமார், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பிறகு சீமான இயக்கித்தில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

Also read… ராயன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷின் அக்கா கணவர் – வைரலாகும் போட்டோ

நா.முத்துக்குமார் வரிகளுக்கு மயங்காத, கலங்காத உள்ளங்கள் இல்லவே இல்வை. காதல், சோகம், ஏக்கம், கொண்டாட்டம், துரோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் தன் பாடல் வரிகளால் உணர்த்தி இருப்பார். அவரது பயணம் அவர் இறந்த பிறகும் நீண்டுகொண்டே செல்கிறது. அவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் ’பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே’.

போக்கிரி, அழகிய தமிழ் மகன், சந்திரமுகி, நந்தா, வாரணம் ஆயிரம் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் இவரது படைப்புகளுக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது உள்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை படைத்துள்ளார். ஒரு மனிதன் உயிரிழப்பிற்கு மொத்த ஊரும் சோகத்தில் இருந்தது என்றால் அது முத்துகுமாரின் மரணம் என்று சொல்லலாம்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நா.முத்துகுமார் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அதில், நா.முத்துகுமார் எவ்வளவு அழகாக எழுதி இருக்கார் பாருங்க. ”கடன் வாங்கி சிரிக்கிறது”. நிறைய பேர் அப்படிதான் பன்றோம் இல்லையா என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் கூறும் இந்தப் பாடம் எந்திரன் 2.0 படத்தில் வரும் ”புல்லினங்கால்” பாடல் ஆகும். இதில்,

மொழி இல்லை மதம் இல்லையாதும் ஊரே என்கிறாய்புல் பூண்டு அது கூடசொந்தம் என்றே சொல்கிறாய்காற்றோடு விளையாட
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன்நெஞ்சை கொய்கிறாய்உயிரே எந்தன் செல்லமே
உன் போல் உள்ளம் வேண்டுமேஉலகம் அழிந்தே போனாலும்
என்ற வரிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?