கமல்ஹாசனுடன் கைகோக்கும் ஜி.வி.பிரகாஷ்.. வெளியான அப்டேட்!
Kamal Haasan : தமிழ்த் திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் பிரபலத்தின் உச்சியில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப் பிரமாண்ட மான கதைக்களத்துடன் உருவாகிவரும் இத்திரைப்படம் வருகின்ற 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து தமிழ்த் திரைப்படங்களில் பிரம்மாண்ட நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். தனது நடிப்பினால் பிரபலமான இவருக்கு மக்களிடையே உலகநாயகன் என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு தன்னை உலகநாயகன் என்ற அழைக்கவேண்டாம் கமல் அல்லது KH என்று அழைத்தால் போதும் என்று மூன்று பக்க அளவினாலான வேண்டுகோள் பதிவை வெளியிட்டார். இதன் பிறகு பெரிதும் பேசப்பட்ட இவர் பின் திரைப்படங்களில் நடிப்பதில் இறக்கினார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் “தக் லைப் ” என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர் சிம்பு, அசோக் செல்வன் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்த திரைப்படம் 2025ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகர் கமல் தற்போது இயக்குநர் அன்பறிவு இயக்கத்தில் தனது 237வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாகக் கமலின் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளருமாக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். தமிழ்த் திரைப்படங்களின் இசையமைப்பில் மூலம் பிரபலமான இவர் பிரபல நடிகர்களான விஜய், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, தனுஷ் , சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க:’’இந்தியாவிலே சிறந்த நடிகை இவங்க’’.. நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஓப்பன் டாக்..!
ஆனால் இவர் இதுவரையிலும் நடிகர் கமலின் திரைப்படத்திற்காக இசையமைத்ததில்லை. இந்நிலையில் தற்போது இயக்குநர் அன்பறிவு இயக்கத்தில் உருவாக்க உள்ள நடிகர் கமலின் 237வது திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் நடிகர் கமலின் தயாரிப்பில் உருவான அமரன் திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைத்தார்.
இந்த திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஹிட்டானதை அடுத்து தற்போது கமலின் திரைப்படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமலின் 237வது திரைப்படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:புஷ்பா 2 எப்படி இருக்கு? – ராஜமௌலி விமர்சனம்.. ரசிகர்கள் ஹேப்பி!
ஜி.வி. பிரகாஷின் திரைப்பட பயணம்
தமிழ்த் திரைப்பட இசையமைப்பில் அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா இவர்களின் வரிசையில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ். ஆரம்பத்தில் இசையமைப்பாளராகத் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவருக்கு 2015ம் ஆண்டு இயக்குநர்க் கே.இ. ஞானவேல் இயக்கிய ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகத் தோன்றிய இவர் தொடர்ந்து இசையமைப்பினை தாண்டி நடிக்க ஆசைப்பட்டார்.
2010ம் ஆண்டு எஸ். சங்கர் தயாரிப்பில் உருவான ‘வெயில்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதிலும், இசையமைப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். இவர் ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம் மற்றும் மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து இவருக்குப் பல திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் தேடிவந்தனர்.
இதையும் படிங்க:2024-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிறிய பட்ஜெட் படங்கள் லிஸ்ட் இதோ
இந்நிலையில் இவரின் இசையமைப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூலிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி பயங்கர வெற்றியாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் ஜி.வியின் இசையமைப்பில் வெளியான மின்னலே, உயிரே மற்றும் கனவே போன்ற பாடல்கள் பயங்கர ஹிட்டாகியுள்ளது. தற்போது வரை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது சிவகார்த்திகேயனின் புறநானூறு, 13 மற்றும் தற்போது கமலின் 237வது திரைப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.
இதையும் படிங்க:33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ரஜினி?