ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. என்ன நடந்தது?
Rajini movie : சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ படத்துக்கு இளையராஜா செக் வைத்துள்ளார். அனுமதி இல்லாமல் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ’கூலி’ (Coolie) திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது.
Also Read : சூப்பர் டூப்பர் ஹிட்டான கில்லி… கவலை தெரிவித்து பேசிய ஓட்டேரி நரி!
அந்த வீடியோவில் இளையராஜாவின் பழைய இசையும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில், ’கூலி படத்தின் டீசரில் இடம் பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெறவில்லை. அதற்கான அனுமதியை தயாரிப்பு நிறுவனம் பெற வேண்டும். அல்லது டீசரிலிருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையை செய்ய தவறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக இளையராஜா தரப்பு குறிப்பிட்டுள்ளது