Cinema Rewind: 7ஜி படம் ஃபுல்லா சைலன்ஸ்… யுவன் சொன்ன சுவாரஸ்ய தகவல்! - Tamil News | Music director Yuvan shankar raja talks about 7 g rainbow colony movie experience | TV9 Tamil

Cinema Rewind: 7ஜி படம் ஃபுல்லா சைலன்ஸ்… யுவன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Published: 

16 Jul 2024 16:31 PM

கடந்த 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலரது நடிப்பில்  வெளியான திரைப்படம் ‘7G ரெயின்போ காலனி’. யுவனின் பாடல்களுடன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் 7ஜி ரெயின்போ காலனி என்ற பெயரிலும், தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனியாகவும் இந்தப் படம் வெளியானது. இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

Cinema Rewind: 7ஜி படம் ஃபுல்லா சைலன்ஸ்... யுவன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

யுவன் மற்றும் செல்வராகவன்

Follow Us On

தனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் செல்வராகவன். தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற, இயக்குநர்களில் ஒருவரான அவர், தனது தனித்துவமான படைப்பால் பாராட்டப்படுகிறார். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்தப் படத்தில் அவரது தம்பி தனுஷும் ஹீரோவாக இன்ட்ரோ ஆனார். இவர்கள் கூட்டணியில் துள்ளுவதோ இளமையை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களும் வெளியாகின. செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, தமிழில் வெளியான கிளாஸிக்கல் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செல்வராகவனின் காதல்கள் விடலைக் காதலில் இருந்து காவியக் காதலை நோக்கி நகர்பவை. விடலைக்காதலின் ஆரம்பத்தை அவர் அடுத்தவர் பொருள் மீதான மனிதனின் ஆசையில் கட்டமைக்கிறார். அது எதிர்பால் ஈர்ப்பாக இருப்பதால் உடனே ஒரு தீவிரத்தன்மை கிடைத்து விடுகிறது. காதல் கொண்டேனில் நாயகி அடுத்தவனின் காதலி. 7 ஜி ரெயின்போ காலனியில் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள்.

இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்களின் கூட்டணிக்காகவே பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. அந்த வரிசையில் யுவன் மற்றும் முத்துகுமார் கூட்டணி தோல்வி அறியாத கூட்டணியாகவே இருந்து வந்தது. அது போலவே இயக்குநர், இசையமைப்பாளர் என இவர்களின் கூட்டணிக்காகவே ரசிகர்களிடம் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்றால் அது யுவன்சங்கர்ராஜா செல்வராகவன் கூட்டணியால் மட்டுமே முடியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இந்த கூட்டணி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தது.

கடந்த 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலரது நடிப்பில்  வெளியான திரைப்படம் ‘7G ரெயின்போ காலனி’. யுவனின் பாடல்களுடன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் 7ஜி ரெயின்போ காலனி என்ற பெயரிலும், தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனியாகவும் இந்தப் படம் வெளியானது. இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

Also read… பாலிவுட் நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா…!

படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணாவிற்கு இதுதான் முதல் படம், அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். ரவி கிருஷ்ணாவின் நடிப்பில் அப்படியே செல்வராகவன் தான் கண்ணுக்குள் நின்றார். அதைவிடவும் ரவி கிருஷ்ணாவின் அப்பாவக நடித்திருந்த மறைந்த மலையாள நடிகர் விஜயன், ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஸ்கோர் செய்திருப்பார். ஊதாறியாக சுற்றித் திரியும் மகனை நினைத்து கண்கலங்குவதும், அதன் பின்னர் காதல் தோல்வியிலும் தனது பொறுப்புகளை சுமந்து நிற்கும் போது, மகனின் வலியை புரிந்துகொண்டு அரவணைப்பதும் செல்வராகவனின் கிளாஸிக்கல் டச்.

இந்தப் படத்தில் இசையமைத்தது குறித்து யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படம் எடுத்துவிட்டு எனக்கு காட்டும் போது படம் ஃபுல்லா சைலன்ஸ். என்ன இப்படி இருக்கு என்று துணை இயக்குநர் செல்வராகவனிடம் கேட்டதற்கு யுவனிடம் கொடு அவன் பாத்துப்பான் என்று கூறியிருக்கிறார். அதனை சிரித்துக்கொண்டே கூறிய யுவனிடம் செல்வராகவன் இப்போ வரைக்கும் நீ இருக்கனுதான் நான் விடுவேன் என்று கூறியிருப்பார். இது நகைச்சுவையாக அவர்கள் பேசினாலும் 7ஜி படத்தில் யுவனின் பின்னணி இசை ரசிகர்களை எந்த அளவிற்கு கட்டிப்போட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நல்ல இயக்குநருக்கு தெரியும் படத்தில் எங்கு எல்லாம் இசையமைப்பாளரின் தேவை இருக்கும் என்று. அதனை செல்வராகவன் யுவனிடம் சரியாக பெற்றார் என்பதே நிதர்சனமான உண்மை!

பல்வேறு விதமான பறவைகளை காண வேண்டுமா?
வெந்தயத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்
இந்த உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க
தினந்தோறும் பயன்படுத்தும் தக்காளியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா..?
Exit mobile version