இயக்குநராக மாறும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்த வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

இயக்குநராக மாறும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜா

Updated On: 

18 Nov 2024 19:04 PM

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இயக்குநராக அவதராம் எடுக்கப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலாவருகின்றது. 1996-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையின் மூலம் தாக்குவதும் அவர்களை மீண்டும் தன் இசை மூலமாகவே மீட்டெடுக்கவும் ஒருவரால் முடிகின்றது என்றால் அவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. ராஜா, ரஹ்மான் வரிசையில் ஒரு தலைமுறையைத் தன் விரல் நுனியில் எழும் இசையாலும், பிரத்யேக ‘ஹம்மிங்’ குரலாலும் வசியப்படுத்தியவர் யுவன். இசையை விரும்பிக் கேட்கும் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்; ‘யுவன் எங்கள் பால்யத்தின் ஒரு பகுதி’ என்ற பதிலை நிச்சயம் சொல்வார்கள். கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் தான் யுவன் இசையில் வெளிவந்த முதல் படமாகும்.

பின்னர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. தனிமை என்பதைத் தனியாகக் கழித்தவர்களைவிட, யுவனின் இசையோடு கழித்தவர்கள் அதிகம். ஒரு தலைக் காதலர்களும், காதலை வெளிப்படுத்தாதவர்களுக்கும் யுவனின் இசை மட்டுமே துணை. “இது காதலா, முதல் காதலா..” என்று உருகியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு ஆண்கள்; ’பேசுகிறேன், பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்’ என்று மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள். யுவன், ஒரு தலைமுறையின் அடையாளம்.

Also read… விமல் நடிப்பில் ‘சார்’ படத்தின் 2-வது ட்ரெய்லர் இதோ!

‘கற்றது தமிழ்’ பாடல்கள் யுவனின் உச்சம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே இசை ரசிகர்களின் மனதிற்கு நெறுக்கமான ஒன்றாகவே உள்ளது. தற்போது லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் என்று சொல்லக்கூடிய காதலையும் அந்த காதலர்களின் தூரத்தின் வலியையும் பாடலாசிரியர் முத்துக்குமாரின் வரிகளுடன் இணைந்து உருக வைத்திருக்கும் யுவனின் இசை. “உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே” என்ற முத்துகுமாரின் வரிகளுக்கு யுவன் அமைத்த மெட்டு இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனின் காதலுக்கும் பொருந்தும் இயல்பான இசை யுவனுடையது. யுவனின் ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடலைக் கேட்டு, அழுகாத கண்கள் இல்லை என்றே சொல்லலாம். சோகத்தில் மட்டும் இல்லாமல் திகட்டத் திகட்ட காதலில் திளைத்திருந்த ஒரு தலைமுறைக் காதலர்களின் சொத்தாக இருந்திருக்கிறது யுவனின் இசை. நந்தாவின் ‘முன் பனியா? முதல் மழையா?’ என்ற யுவனின் பாடல் தொடங்கும் போதே, நாமும் காதலிக்கத் தொடங்கி விடுகிறோம்.

Also read… லப்பர் பந்து படத்தின் ஓடிடி வெளியீடு ஒத்திவைப்பு… காரணம் இதுதான்!

நகரத்தின் இளசுகளின் காதலை இசைக்கும் அதே யுவன், கிராமத்து வாசனை மாறாமல், அந்தக் காதலையும் மிக அழகாக கடத்தியிருக்கிறார் தனது இசையின் மூலம். மகிழ்வான நேரங்கள் மட்டுமல்ல, மிகவும் பெர்சனலான துயரங்களிலும் தோள் கொடுத்தது யுவன் தான். அவரது குரலில் அவர் பாடும், ‘அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்.. அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்’ என்று பாடும் போது சேராத காதலை நினைத்து கண்ணீர் சிந்துவது ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் தான். குறிப்பாக காதல் தோல்விப் பாடல்களில் யுவனின் ஹம்மிங் வரும் பகுதிகளுக்கு மட்டும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்த வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். இந்தநிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுவன் சங்கர் ராஜா, “தான் புதிதாக இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?