5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

AR Rahman: ஒளிமயமான எதிர்காலம் காண உதவுவோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் வேண்டுகோள்!

World Diabetes Day: “உங்களுக்கு ஒருவேளை நீரிழிவு நோய் இருந்தால், அல்லது உங்கள் வட்டத்தில் யாரையாவது அறிந்திருந்தால் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்.இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

AR Rahman: ஒளிமயமான எதிர்காலம் காண உதவுவோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் வேண்டுகோள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Nov 2024 07:20 AM

ஏ.ஆர்.ரஹ்மான்: உலக நீரிழிவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. எத்தனையோ விதமான நோய்கள் உலகை அச்சுறுத்தி வருகிறது. பல நோய்கள் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சில நோய்கள் புதிதாக உருவாகிறது. இன்னும் சில நோய்கள் சீசன் காலத்தில் நம்மை தாக்கும். முன்பை விட இப்போது மருத்துவத்துறையும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைந்து விட்டது. ஹோமியோபதி, அலோபதி பல வழிகளிலும் மக்கள் தங்களுடைய நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியான நிலையில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தற்காலத்தில் அனைவரையும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்று நீரிழிவு நோய். இந்நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பதிவு

இப்படியான நிலையில் இந்திய சினிமாவின் முக்கிய, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நீரிழிவு நோய் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்களே.. – நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள் பற்றி நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் .நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல என புரிந்துக் கொள்ளுங்கள்.

Also Read: Orange Juice: தினமும் 2 கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் போதும்.. சிறுநீரக கற்கள் கரைந்து ஓடும்..!

நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும் என்பதை உணருங்கள்.ஆனால் உலக நீரிழிவு நாளை முன்னிட்டு உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன்

வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவ முடியும். இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு ஒருவேளை நீரிழிவு நோய் இருந்தால், அல்லது உங்கள் வட்டத்தில் யாரையாவது அறிந்திருந்தால் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்.இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்” என தெரிவித்துள்ளார்.

நீரிழிவு தினம் தோன்றியது எப்படி?

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மருந்து பயன்படுத்தப்படும் நிலையில் அதனை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 ஆம் ஆண்டு பிரட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். அவரது பிறந்த தினத்தின் நினைவாகவே உலக நீரிழிவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சர்வதேச அளவில் 180 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. நீரிழிவு நோய் சர்க்கரை நோய் என பரவலாக அறியப்படுகிறது.

Also Read: Health Tips: சமையலறையில் இருக்கும் இந்த பொருள்.. இரைப்பை புற்றுநோயை உண்டாக்குமா..?

நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து உற்பத்தியாகும் குளுக்கோசை உடல் பதப்படுத்த தவறும் போது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. இதில் வகை ஒன்று, வகை இரண்டு, மற்றும் கர்ப்ப கால நீரிழிவு என மூன்று வகைகள் உள்ளது. இந்த குளுக்கோஸின் நிலையற்ற தன்மை ஒருவரின் அன்றாட செயல்பாட்டை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கிறது. நரம்பு பாதிப்பு, இதய பிரச்சினை சிறுநீரக பாதிப்பு, கால் பாதிப்பு, தோல் தொற்று நோய்கள், மனசோர்வு. பல்  சார்ந்த பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் நீரிழிவு நோயால் ஏற்படுகிறது. 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி கிட்டத்தட்ட உலகளவில் 55 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக சொல்லப்படுகிறது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் முன்கூட்டியே அதனை தடுக்கும் வகையில் இந்த நாளில் விழிப்புணர்வானது ஏற்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News