Ilaiyaraaja: சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம்
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை என இளையராஜா கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் இளையராஜா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.கோயிலின் அர்த்த மண்டபத்துக்குள் அவர் நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக தங்கள் கண்டனங்களை தெரிவித்ததால் பிரச்னை மேலும் பெரிதாக தொடங்கியது. இப்படியான நிலையில் தான் இளையராஜா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: TVK Party: கட்சியில் இவர்களுக்கு மட்டுமே பதவி.. விஜய்யின் முடிவால் தொண்டர்கள் ஷாக்!
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024
நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நேற்று இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா சென்றிருந்தார். அவருக்கு கோயில் வளாகத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்தபின் ஜீயர்கள் மற்றும் ஐயங்காரர்களுடன் இணைந்து ஆண்டாள் கோயிலுக்குள் இளையராஜா சென்றார். அப்போது கருவறை எனப்படும் மூலஸ்தானத்திற்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்றபோது இளையராஜா தடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அர்த்த மண்டபத்தின் வாசலில் இருந்து வெளியேறும் இளையராஜா பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யும் இடத்தில் நின்று வழிபாடு செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
Also Read: பணம் மோசடி உஷார்.. செல்போனை தேடிவரும் கும்பல்.. எப்படி ஏமாற்றுவார்கள் தெரியுமா?
அர்த்தமண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் இசைஞானி, மாநிலங்களவை எம்.பி, என அவருக்கே இப்படி ஒரு நிலைமையா என பலரும் கேள்வியெழுப்பினர். இதற்கிடையில் இது தொடர்பாக அறநிலையத்துறை மதுரை இணை ஆணையர் செல்லதுரை விளக்கம் அளித்திருந்தார். அதாவது ஆண்டாள் கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் ஜீயர் தவிர மற்றவர்கள் செல்லும் வழக்கம் இல்லை. வாசலில் நின்று தரிசனம் செய்யலாம் என்பதை இளையராஜா ஏற்றுக்கொண்டார். வாசல் அருகே வரும்போது அவரிடம் விளக்கப்பட்டது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.