STAR: ‘முதல் மழை போலவே நெஞ்சோடு சேர்ந்தாய்’ – ஸ்டார் படத்தின் வீடியோ பாடல்! - Tamil News | Muthal mazhai polave Nenchodu Sernthai Star movievideo song out now | TV9 Tamil

STAR: ‘முதல் மழை போலவே நெஞ்சோடு சேர்ந்தாய்’ – ஸ்டார் படத்தின் வீடியோ பாடல்!

Updated On: 

16 May 2024 15:37 PM

STAR - The First Rain Video | கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.15 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us On

கவின் நடிப்பில் கடந்த 10-ம் தேதி ’ஸ்டார்’ படம் திரையரங்குகளில் வெளியானது. ’பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளது. கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.15 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து படத்தின் பாடலான “முதல் மழை” வீடியோ பாடலை படக்குழு யுடியூபில் வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version