Naga Chaitanya: தியேட்டரில் சமந்தா நடித்த படம்.. ரசித்து பார்த்த நாக சைதன்யா.. வைரல் வீடியோ!

Naga Chaitanya Latest News: சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Naga Chaitanya: தியேட்டரில் சமந்தா நடித்த படம்.. ரசித்து பார்த்த நாக சைதன்யா.. வைரல் வீடியோ!

நாக சைதன்யா

Updated On: 

16 Oct 2024 12:37 PM

சமந்தா படம் : தமிழில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சமந்தா. அதனை தொடர்ந்து சூர்யாவுன் அஞ்சான், விஜயுடன் தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.

Also read… OTT Movies: ஓடிடியில் இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா?

எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா படு கிளாமராக நடனமாடியது இணையத்தில் காட்டுத்தீ போல பேசுபொருளானது.

இந்நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘மனம்’ திரைப்படம் 23 மே 2014 அன்று வெளியானது. இந்தப் படம் தற்போது பத்தாண்டுகளைக் கொண்டாடுகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியதால் மீண்டும் இந்தப் படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் சேர்ந்து நாக சைதன்யா படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். சமந்தாவை திரையில் பார்த்த நாக சைதன்யா சிரித்தார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!