கூலி படத்தில் நடிக்க நாகர்ஜூனா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல் - Tamil News | Nagarjunas salary for Rajinikanths coolie movie viral on social media | TV9 Tamil

கூலி படத்தில் நடிக்க நாகர்ஜூனா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

Published: 

07 Sep 2024 13:49 PM

கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். படத்தில் நடிகர் நாகார்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கூலி படத்தில் நடிக்க நாகர்ஜூனா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

நாகர்ஜூனா

Follow Us On

நடிகர் ரஜினியின் கூலி படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனது 171-வது படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்தபடத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினி தனது 171-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். படத்தில் நடிகர் நாகார்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜூனா சைமன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக நாகர்ஜுனாவின் பிறந்த நாள் அன்று கூலி படக்குழு அறிவித்தது.

Also read… விஜயின் ‘கோட்’ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ!

இந்நிலையில் நாகர்ஜூனா இந்த படத்தில் நடிப்பதற்காக 24 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வில்லன் கேரக்டரில் நடிக்கும் நடிகருக்கு இவ்வளவு பெரிய தொகையை சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ளது என்றும் இது தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version