மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்… வைரலாகும் தகவல்

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 பந்தயங்களிலும் அவர் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரபல கார் ரேசிங் சாம்பியன் நரேன் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சில தகவல்களின்படி 2025ஆம் ஆண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஜிடி ரேசிங் பிரிவில் மீண்டும் பங்கேற்க எனது மெகாஸ்டார் நண்பரான அஜித் குமார் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.. அவர் உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். ஒரு அற்புதமான நடிகர். கார் ரேஸிலும் அவர் மிக விரைவாகவும் செயல்படுவார்.

மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்... வைரலாகும் தகவல்

அஜித், நரேன் கார்த்திகேயன்

Updated On: 

12 Nov 2024 11:56 AM

நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளி இந்த வருடம் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகை த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நிறைவடைந்தது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது. அஜித் ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருவதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற தீபாவளி வெளியாகும் என்பது போல் கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பல வருடங்களாக கார் ரேஸ் பந்தையங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் அஜித்குமார் தற்போது, மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ளப்போகின்றார் என்ற தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகின்றது.

Also read… ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் பாடல் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கார் ரேசிங்கில் ஈடுபட்டு வரும் தல அஜித் மீண்டும் தனது கார் ரேஸின் பயணத்தை துவங்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற “ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா” என்கின்ற கார் பந்தயத்தில் பங்கேற்று, அந்த போட்டியில் 12வது இடத்தை பிடித்தார் நடிகர் அஜித்.

அது மட்டுமில்லாமல் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 பந்தயங்களிலும் அவர் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரபல கார் ரேசிங் சாம்பியன் நரேன் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சில தகவல்களின்படி “2025ஆம் ஆண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஜிடி ரேசிங் பிரிவில் மீண்டும் பங்கேற்க எனது மெகாஸ்டார் நண்பரான அஜித் குமார் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.. அவர் உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். ஒரு அற்புதமான நடிகர். கார் ரேஸிலும் அவர் மிக விரைவாகவும் செயல்படுவார்.

அதிக கார் ரேஸ் அனுபவம் இல்லாத போதிலும், தாமதமாகவே கார் ரேஸை தொடங்கிய போதிலும் அவர் மிகச் சிறப்பாக கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2010இல் பார்முலா 2 கார் ரேஸில் அவர் எவ்வளவு சிறப்பாக கார் ஓட்டினார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேசிலும் அவர் மிகவும் துடிப்பாக செயல்படுபவர் என்று கூறி அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் கார்த்திகேயன்.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்