5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து.. விருது குழுவினர் அறிவிப்பு..

2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி.

ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து.. விருது குழுவினர் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 06 Oct 2024 13:53 PM

போக்ஸோ வழக்கில் கைதான ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப பெற்றுள்ளது விருதுக் குழு. 2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி.

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் வெளியான மேகம் கருக்காதோ’ பாடலுக்காக தேசிய விருது நடன இயக்குநரான ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த விருதை திரும்ப பெறுவதாக விருதுக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய திரைப்பட விருதுகள் பிரிவானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ தலைப்பு: 2022க்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள்.

21.8.24 தேதியிட்ட தேசிய திரைப்பட விருதுகள் குழுவின் கடிதம், 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு 12.9.24 அன்று ஸ்ரீ ஷேக் ஜானி பாஷாவிற்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச் சாட்டுகள் வெளிவருவதற்கு முன்பே வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: ஏசி இல்லாமல் இருக்க முடியலையா..? இந்த பிரச்சனைகளை அன்போடு அழைக்கிறீர்கள்!

குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை மற்றும் விவகாரம் கீழ்த்தரமாக இருப்பதால், திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஸ்ரீ ஷேக் ஜானி பாஷாவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனவே, 8.10.24 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள 70வது தேசிய திரைப்பட விருது விழாவிற்காக ஸ்ரீ ஷேக் ஜானி பாஷாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வாபஸ் பெறப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். நடன இயக்குனராக இருந்த ஜானி மாஸ்டர், சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்த பெண் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்..! இயக்குநர் யார் தெரியுமா..?

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜானி மாஸ்டர் வெளியிட்ட அறிவிப்பில், “அந்த பெண் தன்னை பலமுறை சந்தித்து, தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டதாகவும். அவர் மீது பரிதாபப்பட்டு மட்டுமே தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்ற அவருக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் புஷ்பா இடத்தில் பணிபுரியும் பொழுது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் தன்னை அந்த பெண் டார்ச்சர் செய்து மிரட்டத் தொடங்கியதாகவும் கூறியிருக்கிறார் நடன இயக்குனர் ஜானி. மேலும் இந்த விவகாரம் அனைத்தும் புஷ்பா பட இயக்குனர் சுகுமாருக்கு தெரியும் என்றும், நாங்கள் இருவரும் இணைந்து தான் அந்த பெண்ணுக்கு புத்திமதி கூறியதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News