5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“பழி வாங்குகிறார்”.. நடிகர் தனுஷ் மீது நயன்தாரா பரபர குற்றச்சாட்டு.. மூன்று பக்க அறிக்கை!

Nayanthara: படத்திற்கு எதிரான உங்கள் பழிவாங்கும் எண்ணம் என்னையும் எனது கணவரை மட்டும் பாதிக்கவில்லை, இந்த படத்திற்காக தங்கள் முயற்சியையும் நேரத்தையும் கொடுத்த அனைவரையும் பாதிக்கிறது. நான், என் வாழ்க்கை, என் காதல் மற்றும் திருமணம் பற்றிய இந்த நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் எனது நலன் விரும்பிகள் பலரின் வாழ்த்துகள் மற்றும் நான் நடித்த பல படங்களில் இருந்த நினைவுகளும் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிக முக்கியமான படமான நானும் ரவுடி தான் சேர்க்கப்படவில்லை.

“பழி வாங்குகிறார்”.. நடிகர் தனுஷ் மீது நயன்தாரா பரபர குற்றச்சாட்டு.. மூன்று பக்க அறிக்கை!
நயன்தாரா மற்றும் தனுஷ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Nov 2024 13:48 PM

நடிகை நயன்தாரா தனது திருமண டாக்குமென்டரி வெளியாவதற்கு நடிகர் தனுஷ் இடையூறாக இருப்பதாக கூறி ஒரு காட்டமான கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியன் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நயன்தாரா. 2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நயன்தாரா. அதற்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு சந்திரமுகி படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தார் நயன்தாரா.

தற்போது நாயகிகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நயன்தாரா. இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்கள் பிறந்தனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால் திருமணம் நடைப்பெற்றும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த ஆவணப்படம் வெளியாகாமலே இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் இன்று நடிகை நயன்தாரா தனுஷிற்கு எதிராக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கடிதம் சினிமா வட்டாரங்களிடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் நடிகை நயன்தாரா கூறியதாவது, அன்புள்ள திரு தனுஷ் கே ராஜா. S/o கஸ்தூரி ராஜா, B/o செல்வராகவன். பல தவறான விஷயங்களைச் சரி செய்வதற்கான கடிதம் இது. உங்களைப் போன்ற ஒரு நல்ல நடிகர். உங்கள் தந்தை மற்றும் உங்கள் சகோதரரின் ஆதரவுடனும் ஆசீர்வாதத்துடனும், ஒரு பிரபல இயக்குனரான நீங்கள் இதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமா துறையில் எந்த தொடர்பும் இல்லாமல் சுயமாக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். இது ரகசியம் அல்ல.

நெட்ஃபிளிக்ளில் எனது ஆவணப்படத்தின் ரிலீஸ் என்பது நான் மட்டுமல்ல, எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இந்த ஆவணப்படத்தில் பல நபர்களின் நேரமும் உழைப்பும் உள்ளது.

படத்திற்கு எதிரான உங்கள் பழிவாங்கும் எண்ணம் என்னையும் எனது கணவரை மட்டும் பாதிக்கவில்லை, இந்த படத்திற்காக தங்கள் முயற்சியையும் நேரத்தையும் கொடுத்த அனைவரையும் பாதிக்கிறது. நான், என் வாழ்க்கை, என் காதல் மற்றும் திருமணம் பற்றிய இந்த நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் எனது நலன் விரும்பிகள் பலரின் வாழ்த்துகள் மற்றும் நான் நடித்த பல படங்களில் இருந்த நினைவுகளும் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிக முக்கியமான படமான நானும் ரவுடி தான் சேர்க்கப்படவில்லை.

இரண்டு வருடங்கள் கழித்து NOC மற்றும் எங்கள் Netrlix ஆவணப்பட வெளியீட்டிற்கு உங்களின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த நாங்கள் இறுதியாக எங்கள் முயற்ச்சியை கைவிட முடிவு செய்தோம். நானும் ரவுடி தான் பாடல்கள் அல்லது காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதி மறுத்தீர்கள்.

Also read… 50 கோடிகளை கடந்தது சூர்யாவின் ‘கங்குவா’ படம் – படக்குழு வெளியிட்ட தகவல்

நானும் ரவுடி தானின் பாடல்கள் இன்றுவரை பாராட்டப்படுகின்றன, ஏனென்றால் பாடல் வரிகள் உண்மையான உணர்வுகளிலிருந்து வந்தவை, எங்கள் ஆவணப்படத்தில் நாங்கள் பயன்படுத்த சிறந்த இசை எதுவும் இல்லை என்பதை அறிந்தே அதைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், பாடல்களின் வரிகள் கூட. அது என் இதயத்தை உடைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

உங்களின் இந்த முடிவு எங்கள் மீதான உங்கள் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே என்பதும், நீங்கள் வேண்டுமென்றே இவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு உங்களின் சட்ட அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? வைரலாகும் தகவல்

அந்த வீடியோவில் எங்களது மொபைல் போனால் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சியை பயன்படுத்தியதற்கு நீங்கள் 10 கோடி கேட்டது உங்களின் தரத்தைக் கீழாக காட்டுகிறது. உங்கள் படங்களில் இசை வெளியீட்டு விழாவில் பேசுவதில் பாதியாகவாது நீங்கள் இருந்தால் நல்லா இருக்கும்.

உங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பை நான் பெற்றுள்ளேன், அதற்கு சட்டப்பூர்வமான வழிகளில் நாங்கள் பதிலளிப்போம். எங்களின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்திற்காக நானுக் ரௌடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு நீங்கள் NOC வழங்க மறுத்ததை, பதிப்புரிமைக் கோணத்தில் நீதிமன்றத்திற்கு நீங்கள் நியாயப்படுத்தலாம், ஆனால் அதில் ஒரு தார்மீகப் பக்கமும் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று அந்த கடிதத்தில் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Latest News