5 ஆண்டுகளுக்குப் பிறகு பிடித்த இடம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியின் நெகிழ்ச்சி!
Nayanthara, Vignesh Shivan: நடிகை நயன்தாரா சமூக வலைதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,5 வருடங்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்த இடத்திற்கு வந்துள்ளதாக பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2015ல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடிகை நயன்தாரா நடித்தார். இந்த படத்தில் ந்டித்த போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு காதல் மலர்ந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த 2022 ஜூன் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில்இவர்களுடைய திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த சினிமா பிரபலங்களும், முக்கிய விஐபிக்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணமான ஒரு சில மாதங்களிலேயே இரட்டைக் குழந்தைகளை வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றெடுத்தார்கள். இந்த குழந்தை சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் 5 வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறினர். மேலும் தங்களது குழந்தைகளுக்கு உயிர் உலக் என்கிற பெயர் வைத்து சமூக வலைத்தளங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
Also Read: Director Gautham Menon: மலையாளத்தில் கால்பதிக்கும் தமிழ் இயக்குநர்… ஹீரோ யார் தெரியுமா?
தமிழில் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நயன்தாரா. தற்போது மலையாளத்தில் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார். கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் நயன்தாரா வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் அவர் வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில தினங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி இணைந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார்டன் பகுதியில் மரத்தடியில் விக்னேஷ் சிவனுடன் அமர்ந்திருக்கும் நயன்தாரா இருவரது போட்டோவை பகிர்ந்து, ‛எனக்கு மிகவும் பிடித்த இந்த இடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.ஆனால் இது எந்த இடம் என அவர் குறிப்பிடவில்லை என்பதால் ரசிகர்கள் அப்படி எந்த இடமாக இருக்கும் என்று புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.