Nepolean: டபுள் ஹேப்பி.. மருமகளும் திருநெல்வேலி தான்..நன்றி மறக்காத நெப்போலியன்!
Nepolean son engagement: தன் வாழ்க்கையில் மறக்க முடியாத திருப்பத்தை ஏற்படுத்திய திருநெல்வேலியில் தான் நெப்போலியனுக்கு மருமகளும் கிடைத்துள்ளது அவருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை உண்டாக்கி உள்ளது.அந்தப் பெண்ணின் பெயர் அக்ஷயா. மணப்பெண்ணுக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி தான் சொந்த ஊர் ஆகும்.
நெப்போலியன்: தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் நெப்போலியன் புதிதானவர் அல்ல. தற்போது அவருடைய மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் மூத்த மகனின் திருமணம் உறுதியானதில் நெப்போலியன் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளார். சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விவசாய பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் நெப்போலியனின் மூத்த மகன் தனுசை திருமணம் செய்ய போகும் பெண் யார் என்ற என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அந்தப் பெண்ணின் பெயர் அக்ஷயா ஆகும். மணப்பெண்ணுக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி தான் சொந்த ஊர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் தனுசுக்கும், அக்ஷயாவுக்கும் வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. மணமக்களை அரசியல் திரையுலகம் சார்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்தி வருகின்றனர்.
நெப்போலியனுக்கும் திருநெல்வேலிக்கும் உள்ள பந்தம்
நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயது ஆக இருந்தபோது அவரால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காத நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாரம்பரிய வைத்தியம் பற்றி அறிந்து மகனை அழைத்துக்கொண்டு நெப்போலியன் வந்துள்ளார்.
அங்குள்ள அம்பாசமுத்திரம் அருகில் உள்ள வீரவநல்லூரில் பாரம்பரிய வைத்திய மூலம் மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அந்த சிகிச்சை அளிக்கும் இடத்தில் போதிய இடவசதி இல்லாமல் சிகிச்சைக்காக வரும் மக்கள் அவதிப்பட்டு வருவதை அறிந்து கொண்ட நெப்போலியன் தன் சொந்த செலவில் அங்கு மருத்துவமனையை கட்டிக் கொடுத்துள்ளார்.
நெப்போலியன் நான் போதும் மத்திய அமைச்சராக இருந்ததால் அவரது மகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பத்திரிகைகளில் செய்து வெளியாகி இந்தியா முழுவதும் வைரலானது. அங்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் தங்குமிடம் மற்றும் உணவுக்கு மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது.இப்படியாக தன் வாழ்க்கையில் மறக்க முடியாத திருப்பத்தை ஏற்படுத்திய திருநெல்வேலியில் தான் நெப்போலியனுக்கு மருமகளும் கிடைத்துள்ளது அவருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை உண்டாக்கி உள்ளது.
சினிமா, அரசியலில் கலக்கிய நெப்போலியன்
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நெப்போலியன் இயற்பெயர் குமரேசன் ஆகும். இவர் தற்போது திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உள்ள கே.என்.நேருவின் நெருங்கிய உறவினர் ஆவார். 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் குமரேசன். அந்தப் பெயரை மாற்றி நெப்போலியன் என புதுப்பெயரை சூட்டினார் பாரதிராஜா. தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருந்த நெப்போலியன் அனைவரிடத்திலும் எளிதாக சென்றடைந்தது.
இதனை தொடர்ந்து எஜமான், கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, சின்னத்தாயி, தென்காசி பட்டணம், மாயா கரிசக்காட்டு பூவே, கலகலப்பு, வீட்டோட மாப்பிள்ளை, ஐயா, வட்டாரம், தசாவதாரம் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நெப்போலியன் நடித்துள்ளார்.
அரசியலைப் பொருத்தவரை தனது ஆரம்ப காலத்தில் இருந்து திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர் 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன் பின்னர் 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நெப்போலியன் 2015 ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநில துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.