5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தளபதி 69 படத்திற்கு இயக்குநர் வினோத்தின் ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 69 படத்திற்கு இயக்குநர் வினோத்தின் ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்
தளபதி 69
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2024 20:57 PM

தளபதி 69 படத்திற்கு இயக்குநர் வினோத்தின் ப்ளான் இதுதான் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. நடிகர் விஜயின் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச். வினோத் இயக்க உள்ளார். தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களோடு உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். ஏற்கனவே அவருடைய “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வருகின்றது.

கடந்த மாதம் 5-ம் தேதி விஜய் நடிப்பில் அவரது 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.

நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது.

Also read… Theatre Release Movies: நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also read… முன்னணி நடிகர்களின் நாயகிதான் இந்த சிறுமி… யார் தெரியுதா?

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது. கடந்த மாதம் தயாரிப்பு நிறுவனம் இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று குறிப்பிட்டு படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதையும் இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை தீரன் ஸ்டைலில் வினோத் உருவாக்கவிருப்பதாகவும்; இதில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கு என்று தெரியவில்லை.

Latest News