Sivakarthikeyan: புறநானூறு ஷூட்டிங் .. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெளியான இனிப்பான செய்தி!
purananooru :தமிழ்த் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது தொடர்ந்து இவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் SK24 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் SK 24 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தில் இருந்துவருகிறது.
இப்படத்தினை தொடர்ந்து தற்போது SK25 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ஜெயம் ரவி எனப் பலரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். நடிகர் சூர்யா முதலில் நடிக்க இருந்த இந்த திரைப்படத்தில் சில காரணங்களால் அவர் விலகினார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக நியூ அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் திரைப்பட பயணம்..
தமிழ்த் திரைப்படங்களில் சின்னத்திரை பிரபல தொகுப்பாளராக மக்களிடையே அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் காமெடியான கதைகளில் வெள்ளித் திரையில் நடிக்க ஆரம்பித்து தற்போது பிரபல கதாநாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு இயக்குநர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் வெளியான “மெரினா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஹீரோவாக மாறுவதற்கு முன்னர் சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: குடும்பம் தான் முக்கியம்.. சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகர்!
திரைப்படங்களின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால் கண்டிப்பாக நடிகராக வேண்டும் என்ற ஆசையினாலும் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. 3, மனம் கொத்தி பறவை மற்றும் எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.பிரபலமாவதற்கு முன் பல படங்களில் நடித்தலும் இவருக்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ரசிகர்களைக் கொடுத்து இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம்தான்.
இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் மற்றும் ரெமோ போன்ற திரைப்படங்கள் தொடர் ஹிட் படங்களாக அமைந்தது. இந்நிலையில் தொடர்ந்து பிரபல நடிகராக வலம்வந்த இவருக்கு “கோட்” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து சர்ப்ரைஸாக இருந்தது. அதில் விஜய் இவரிடம் துப்பாக்கியைக் கொடுப்பது போன்ற காட்சிகள் மிகவும் வைரலானது. இந்நிலையில் விஜய்க்கு அடுத்தாக இவர்தான் என்று மக்களும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க:ஓடிடியில் கலக்கும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK24 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த் இணைந்து நடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் 2025ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட வருடமாக தனக்கான வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸூக்கு இப்படம் அதனை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புறநானூறு திரைப்படத்தின் அப்டேட்..
இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி , அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிக்க உள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இதையும் படிங்க:LIK படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்!
இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.